பக்கம்:விசிறி வாழை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பன்னிரண்டு 121

சேதுபதி பேசுகிறேன்” என்று அவர் மேலும் தொடர்ந்தபோது, யாரை தினத்து தினத்து உருகிக் கொண்டிருந்தாளோ, யாருக்காக என்னென்ன எண்ணமிட்டுக் கொண்டிருந்தாளோ, பாருடைய குரகச் கேட்க ஏங்கிக் கொண்டிருந்தாளோ, யாருடன் உரையாட ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாளோ, யாருடைய அந்தரன் கத்தை அறியக் காத்துக் கொண்டிருந்தாளோ அந்தக் குர கலக் கேட்டபோது, அவளுடைய உள்ளம் படபடவென்று அடித்துக்கொண்டது. தான் எழுதிய கடிதத்தைப் பா t விட்டுத்தான், அதைப் பார்க்காதவர்போல் டெலிபோன் செய்திருக்கிறார் என்று எண்ணியவளாய்த் தன் உணர்ச் சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மிக அமைதியாக, “நான் தான் பார்வதி பேசுகிறேன். வணக்கம்’ என்றாள்.

வணக்கம் என்று பதிலுக்குக் கூறிய சேதுபதி. ஒன்று மில்லை; இன்றுமுதல் எனக்கு அதிக வேலை இருக்கிறது. புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கப் போகிறேன். ஆகையால், மால் வேண்களில் இனி ஓய்வு இருக்காது. வீட்டுக்குக் திரும்பி வர ஒன்பதாகிவிடும். பாரதியைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது. இதைச் சொல்வதற்குத்தான் கூப்பிட்டேன்.” -

‘அப்படியா ஆகட்டும் பார்வதியின் குரலிலிருந்து சேதுபதியால் எதையும் ஊகிக்க முடியவில்லை. -

சேதுபதி அன்று மாலை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மேஜையின்மீது பார்வதியின் கடிதம் அவருக்காகக் காத் திருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தவர், பார்வதி என்னிடம் டெலிபோனில் பேசிய பிறகே, எனக்கு இக் கடிதத்தை எழுதியிருக்க வேண்டும். என்னிடம் அவளுக் குள்ள அன்பு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே டெலிபோனில் பேசுவதற்கு முன்பே கடிதம் எழுதியிருப்பது போல் எழுதியிருக்கிருள்” என்று எண்ணிக் கொண்டார்.

சேதுபதி தன் கடிதத்தைக் கண்டுவிட்டே டெலி போனில் பேசியிருக்கிறார் என்று பார்வதி எண்ணிக் கொண்டதைப் போலவே, பார்வதியிடம் தான் டெலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/125&oldid=686975" இலிருந்து மீள்விக்கப்பட்டது