பக்கம்:விசிறி வாழை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இரண்டு 25.

களுக்கு இது ஒரு வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் ஒளவையைப் போல் கல்விஅறிவு பெற்ற வர்களாகி, உயர்ந்த பண்புடையவர்களாய்த் திகழவேண்டும் என்பது என் அவா. ஆல்ை, ஒளவையைப்போல் திருமண. வாழ்க்கையே வேண்டாமென்று கூறிவிடக்கூடாது! (சிரிப்பு. -கரகோஷம்-ஆரவாரம்.)

குடும்பக் கலைபற்றி எனக்குத் தெரியாது. நான் பழைய தலைமுறையைச் சேர்ந்தவன். நமது நாகரிகம் எல்லாத் துறைகளிலும் நாலடி உயர்ந்திருக்கிறது. முன்னெல்லாம் பாயில் படுத்து உறங்கினேம் இப்போது நாலடி உயரமான கட்டிலில் படுத்து உறங்குகிருேம். முன்னெல்லாம் மனையில் உட்கார்ந்து சாப்பிட்டோம். இப்போதோ மேஜைக்கு முன்னல் நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடுகிருேம். நாற் காலியும் மேஜையும் போட்டுப் பிரசங்கங்கள் செய்கிருேம். இவ்விதம் எல்லாக் காரியங்களையுமே உயர்த்திக் கொண் டிருக்கிருேம். ஆனால் இவையெல்லாம் உண்மையான உயர் வாகா. முக்கியமாக நமது பாரதநாட்டின் பண்பு உயர வேண்டும். அந்தப் பண்பை வளர்ப்பது குடும்பத்தின் தலைவி களாகப் போகிற பெண்கள் கையில்தான் இருக்கிறது” என்று கூறி முடித்தார்.

சொற்பொழிவு நிகழ்ச்சி முடிந்து, கலை விழா ஆரம்ப மாவதற்குள் மணி எட்டரை ஆகிவிட்டது. பிரின்ஸிபால் பார்வதி முன்வரிசையில் போடப்பட்டிருந்த சோபாக்களில், தலைவர்களை அமரச் சொல்லித் தானும் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். .

கல நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சேதுபதி அடிக்கடி தம் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்வதி கவனிக்கத் தவறவில்லை. மணி ஒன்பதுக்கு சேதுபதி இருக்கையை விட்டு எழுந்து வெளியே புறப்பட்டபோது, குழுமியிருந்தவர்கள் அத்தனை பேருடைய பார்வையும் அவர் மீதே பதிந்தது. .

பின்னேடு எழுந்த பார்வதி வாசல்வரை சென்று அவரை வழி அனுப்பிவிட்டு வந்தாள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/29&oldid=689525" இலிருந்து மீள்விக்கப்பட்டது