பக்கம்:விசிறி வாழை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஆறு 61

தனர். பார்வதி, உள்ளே சமையலறையில், ஞானத்துக்கு உதவியாகக் காய்களைத் திருத்திக் கொடுப்பதில் முனைந் திருந்தாள். அவளுடைய ஞாயிற்றுக்கிழமை திட்டங்களில் அதுவும் ஒன்று காய்கள் திருத்துவதில் பார்வதிக்கு எப்போதுமெ பிரியம் அதிகம்!

வாழைப்பூவின் இதழ்களே ஒவ்வொன்றாகப் பிய்த்து அதன் நீள நீளமான பூக்களைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்து, அந்தப் பூக்களின் இதயத்தில் ஒளிந்திருக்கும் ‘கள்ளன’க் கண்டு பிடித்து அகற்றுவது ஒரு பெரிய கஜல. அன்று அதை ஒரு விளையாட்டுச் சிறுமிபோல் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் பார்வதி.

வாழைப்பூ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பார்வதி தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.

என் இதயத்தில் புகுந்திருக்கும் கள்ளனக் கண்டு பிடித்து அகற்றும் சக்தி எனக்கு உண்டா? இந்தக் கேள் விக்கு அவளால் விடை காண முடியவில்லை. கை, பூவிலுள்ள கள்ளர்களைக் களைந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மனம் தன் இதயக் கள்ளனக் களையும் மார்க்கம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

அேத்தை! வாசலில் யாரோ இரண்டு மாணவிகள் உங்களைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள்’’ என்று ராஜா கூறிய வார்த்தைகள் அவள் சிந்தனையைக் கலைத்தன.

பார்வதி எழுந்து வாசலுக்குச் சென்றபோது அங்கு உட்கார்ந்திருந்த மாணவிகள் இருவரும் மரியாதையோடு எழுந்து நின்று வணக்கம் செய்தனர்.

  • ஓ, நீங்களா!...ஒரு வாரமாக நீங்கள் வகுப்புக்கு வருவ தில்லை என்று கேள்விப்பட்டேன்...ஏன்?...சம்பளம் கட்ட முடியவில்லை என்றால் என்னிடம் வந்து சொல்லி யிருக்க லாமே!...நான்கூட ஒரு காலத்தில் உங்களைப்போல் சம்ப ளம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டவள்தான். வறுமீை, உங்கள் படிப்புக்குத் தடையாயிருக்கக் கூடாது. உங்கள் தாய் தந்தையரை எனக்குத் தெரியாது. அதனால் பரவா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/65&oldid=689565" இலிருந்து மீள்விக்கப்பட்டது