பக்கம்:விசிறி வாழை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஏழு 71

‘உங்களுக்குத்தான் எதிலேயுமே அக்கறை கிடை யாதே எந்த நோமும் வேலைதான். அதே ஞாபகம்தான்! உங்க வயசே உங்களுக்கு நினைவில் இருப்பதில்லையே!”

  • நான் எல்லாவற்றையும் மறந்து விடுகிறவன் என்று தீர்மானித்துவிட்டாயா? சின்ன வயசிலே நடந்ததெல்லாம் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் பிறந்தபோது எனக்கு வைத்த பேரைக்கூட. இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறேன், தெரியுமா?...??
  • அடேயப்பா ரொம்ப ஆச்சரியமாயிருக்கே அது சரி; உங்களுக்கு இப்போது என்ன வயசாகிறது தெரியுமா?...??

‘அதுதான் மறந்து போச்சு. உள்ளே போய் அத்தை யைக் கேட்டுப் பாரு. சரியாகச் சொல்லுவாள். அவளைவிட எனக்கு நாலு வயசு கூட. அவளுக்கு இப்போ...?? -

‘நாற்பத்தெட்டு ஆகிறது.’’ - ‘அப்படின்ன எனக்கு இப்ப ஐம்பத்திரண்டு ஆகியிருக் கனுமே!...ஒl. அவ்வளவு வயசாகி விட்டதா எனக்கு’

‘அப்பா, அம்மாவையும் உங்களையும் சேர்ந்தாப் போல நிற்க வைத்து நமஸ்காரம் செய்ய முடியகலயே என்று எனக்கு ரொம்ப நாளாகக் குறை. கொஞ்சம் எழுந்து அம்மா படத்துக்குப் பக்கத்திலே நில்லுங்கப்பா... நமஸ் காரம் செய்யறேன்...?? -

கண்களில் தளும்பிய கண்ணிரைத் துடைத்தபடியே சேதுபதி தமது மனைவியின் படத்தைப் பார்த்தார். அந்தக் களை பொருந்திய முகம் தெய்வத் தன்மை பெற்று விளங் கியது. . . -

திருமணத்தன்று சேதுபதி அவளுக்கு மாலே சூட்டிய போது அவள் வெட்கம் சூழத் தலை குனிந்த வண்ணம் தம் எதிரில் நின்ற காட்சி அவர் நினவுக்கு வந்தது.

அன்று கல்யாண கோலத்தில் நின்ற சரஸ்வதியின் ஆழகிய வடிவத்துக்கும் இப்போது எதிரில் நிற்கும் பாரதி யின் தோற்றத்துக்கும் அதிக வித்தியாசம் இல்ல. சேதுபதி

வின் நெஞ்சத்தில் உணர்ச்சி அலேகள் பொங்கின. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/75&oldid=689576" இலிருந்து மீள்விக்கப்பட்டது