பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்க்கை வரலாறு

37



யைப் பயன் படுத்திக் கொண்டு, இந்தியாவில் போராட் டம் துவக்கி ஆட்சியினரைத் திணற வைக்க வேண்டும் என்றுறு காந்திஜி விரும்பவே இல்லே. நேர்மையான முறையில் உரிமைகளைக் கோரினார் அவர்.அவருக்கும் வைஸ்ராய்க்கு மிடையே கடிதப் போக்கு வரத்து நடைபெற்றது ராஜதந்திரத்தில் ஊறிப் போயிருந்த ஆங் கிலேயர் முடிவும் தெளிவும் நிறைந்த பதில் எதுவும் தரவில்லை . கண்துடைப்பு சமாதானங்களும் தட்டிக் கழிக்கும் உறுதிமொழிகளும் கூறினர்.சமரசம் பேசத் தூதர்களை அனுப்பி காலம் போக்கினர்.தலைவர்கள் பலரை விடுதலை செய்தனர்.அதே வேளையில் யுத்த நிதி என்ற பெயரில் நாட்டு மக்களிடமிருந்து பணத்தை சுரண்டினர்.ஆயிரகணக்கான மக்களைப் பட்டாளத்தில் சேர்த்தனர்.

1942 ம் வருஷம் இந்திரா நேரு பெரோஸ் காந்தியை திருமணம் செய்து கொண்டாள். காந்திஜீயின் ஆசியுடன் நிழ்ந்த காதல் மணம் அது. சேவா கிராமத்திலே கல்யானனத்தை நடத்தலாம் என்றார் காந்திஜி.

ஆயினும், விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் இந்திரா வின் திருமணம் ஆனந்த பவனத்தில் தான் நடைபெற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பொலிவு குன்றி யிருந்தபவனத்தில் மீண்டும் ஆனந்தம் பொங்கவேணும் அதற்கு இந்திராவின் கவியாணம் ஆரம்ப விழாவாக அமையும் என்று ஆசைப்பட்டார்கள் அவர்கள்.

அவர்கள் விரும்பிய விதமே கலியாணம் சிறப்பாக நிகழ்ந்தது. ஆனந்த பவனமும் சில தினங்கள் கோலா கலமாக விளங்கியது.