பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龙4蟹 விஞ்ஞானச் சிக்கல்கள்

Eరెగేయోలెడౌలెసెక్రౌడౌథ్రెయోథెరెడె அந்தப் பெருஞ் சிக்கல் சிக்கினால், அது அறுவை சிகிச்சைப் பெற்று அறுந்து, அவனியிலே குப்பைக் கூலமாக மாறி விடுவதும் உண்டு.

உலகில் இவ்வாறு குப்பைகளாக மாறிய சிக்கல்கள், எல்லாத் துறைகளிலும் ஏராளமாகக் கிடக்கின்றன.

அதே சிக்கல், ஒர் அறிஞனிடம் அகப்பட்டால், பொறுமையோடு சிந்திக்கும் சூழலைப் பெறுமானால், அது, அவனியிலே உருவாகப் போகும் பல சிக்கல்களை அவிழ்த்து விடப் பயன்படுகின்றது.

பல துறை மேதைகளிடம் அத்தகைய சிக்கல்கள் அகப்படுமானால், உலகத்திலே உருவாகும் எண்ணற்றச் சிக்கல்களை அவிழ்க்க அது பயன்படுவது மட்டுமல்ல, சிக்கல்களே சூழாத அறிவுவகத்தையே அமைத்துக் காட்டவும் கூடும்.

எனவே, ஒரு சிக்கல் அறியாமையிடமும், அறிவினிடமும் சிக்குகின்றபோது, எத்தகைய சீரிய நிலையை அது எய்துகின்றது என்பதற்கு, கிரேக்கக் கணித மேதை தேவிஸ் ஒரு சான்றாகவே வாழ்கிறார் - ஜியோமெட்டிரிக் கணித இயலுக்கு!

நைல் நதியில், ஆண்டாண்டு காலமாக உருவாக்கப்பட்ட சிக்கலைத் தீர்த்திட, கிரேக்கக் கணித மேதை தேலிஸ் என்பவர் கண்டுபிடித்த அடிப்படை விதியே, ஜியோமெட்டிரிக் கணக்கின் புதிய ஒர் உருவத்தை முதன் முதலாக உலகுக்கு வழங்கியது.