பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.துப்பறியும் கதையிலே

சிக்கல்!

உலக நாடுகளிலே உள்ள எழுத்தாளர்கள் பலர் துப்பறியும் கதைகளை எழுதுவதிலே புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

கானன்டாய்ஸ், பெரிமாசன், தாமஸ் ஹார்டி, சேஸ் போன்ற பலர், துப்பறியும் கதைகளுக்குரிய சம்பவங்களை உருவாக்கி, அதைப் படிப்பதற்கு ஏற்றார்போல திகில் உணர்வுகளை ஊடுருவ வைத்து விறுவிறுப்பாகவும் - பரபரப்பாகவும் எழுதுகிறார்கள்.

அவர்கள் எழுதும் துப்பறியும் கதைகளிலே, அறிவும் - அனுபவமும் சிந்தனைத் திறமும் பெரிதும் நிழலாடுகின்றன.

வெகுளி, வெறுப்பு, அழுக்காறு, அவா, எரிச்சல், எத்திப் பிழைத்தல், பழிக்குப் பழி கொலை, கொள்ளை போன்ற சமுதாய உத்திகள்ையே, அவர்கள் தங்கள் கதைகளில் முழுக்க முழுக்கப் பயன்படுத்துகிறார்கள். இறுதியிலே அவற்றிற்கு ஏதாவதொரு வழியில் முடிவு காண் பதையே நாடி, துப்பறியும் கதைகளை எழுதுகிறார்கள்.

ஒரு கதையில், அநியாயங்களும்- அவகேடுகளுமே சூழ்ந்திருந்தாலும், அவற்றில் நியாயங்களையும் - நீதி முறைகளையும் நிலை நாட்டவே அந்தக் கதை இறுதியில் பயன்படுகிறது.