பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கல்ைமணி 的9 கோவேந்தன் கோபக் கனலாய் மாறி, "என்ன, வேடிக்கையா காட்டுகிறீர்கள்?”

'கொண்டு வந்துள்ள உங்களது சரித்திரங்களை எனது வாணாளெல்லாம் படித்தால் கூட, இதில் பத்தில் ஒரு பகுதியைக்கூட படிக்க முடியாது போலிருக்கிறதே,”

'இவற்றையெல்லாம், சுருக்கமான சரித்திரமாக எழுதுங்கள் - உம், போங்கள்!"

"அந்த சரித்திரம், உலகத்தின் முக்கியமான எல்லா சம்பவங்களும் அமைந்ததாக இருக்க வேண்டும்.”

"ஒராண்டு காலத்தை மீண்டும் உங்களுக்கு அவகாசமாகத் தருகிறேன். அதற்குள் முடித்து வாருங்கள்” என்று மன்னன் பொங்கி வழிந்தான்்! கொடுத்த ஒராண்டும் கோடை கொடுமை போல ஒடி மறைந்தது. மறுபடியும் ஒட்டக அணிவகுப்பு வந்து நின்றது!.

தொடுவானத்தைத் தொடுமளவிலே அல்ல! பத்தே பத்து ஒட்டகங்கள் மட்டுமே நின்றன!

பப்பத்துப் புத்தகங்களைச் சுமந்தபடியே ஒவ்வொரு ஒட்டகமும் நின்றது.

வெகுண்டான் வேந்தன்! மிருகமானான்!” 'உலகத்தின் மிக முக்கியமான சம்பவங்களை மட்டுமே அவர்களை எழுதச் சொல்லுங்கள்”

“ஒவ்வொரு நாட்டிலும், எல்லாக் காலத்திலும் நடந்தவையாக அவை இருக்க வேண்டும்.”

'இதற்கு எவ்வளவு காலமாகும்?” என்றான் வெடித்த எரிமலைக் குரலில் மன்னன்!