பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேளாண்மை

33

குகை வாசத்திற்கு அடுத்தாற்போல் மனிதனின் வீடு மரக்கிளைகளில் அமைந்தது. தரையில் உலவும் கொடிய விலங்குகளிடமிருந்து மனிதன் தன்னைக் காத்துக்கொள்ளவே இத்தகைய வீடு அமைத்தான். பின்பு உலோக காலம் தோன்றி விலங்குகளை அடிமைப் படுத்திக்கொண்ட பின் வீடு தரைக்கு வந்தது. மரக்கிளைகள் நடப்பட்டு தாவர நார்களும், கொன்று தின்னப்பட்ட விலங்குகளிலிருந்து மிஞ்சிய நரம்புகளும் குறுக்கு வட்டமாகப் பின்னப்பட்டு இடைவெளியில் மரத்தின் இலைகளும் தழைகளும் திணிக்கப்பட்டு வீடுகள் அமைக்கப் பட்டன. மிகவும் குறைந்த வசதிகள் அமைந்த இத்தகைய வீடுகள் முக்கோண வடிவமாகத்தான் அமைந்திருக்க வேண்டும். இவை காற்றுக்கும், மழைக்கும், வெப்பத்திற்கும் ஈடு கொடுப்பதாயில்லை. மேலும், கொடிய விலங்குகளின் தொந்திரவும் சேர்ந்திருக்கலாம். எனவே, வீட்டை உறுதிப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று.

எகிப்தின் பெரும் பகுதிகளில் கற்கள் மிகுதியாகக் கிடைத்தன. மரக்கிளைகளைவிடக் கற்கள் உறுதியானவை என்றறியப்பட்டபின் கற்களினால் வீடுகள் கட்டப்பட்டன. இதன் விளக்கமாகத்தான் எகிப்தியப் பிரமிடுகள் விளங்குகின்றன. வேறு சில இடங்களில், குறிப்பாக ஆற்றோரங்களில் களிமண் அதிகமாகக் கிடைத்தது. மனிதன் அதைச் சிறுசிறு பட்டை வடிவங்களாக உருவாக்கிச் சூரிய வெப்பத்தினால் உறுதியுள்ள தாக்கினான். பின்னர் நெருப்பின் பயன் தெரிந்தபின் அம் மண் கற்கள் மேலும் உறுதியாக்கப்பட்டன. எகிப்தியப் பிரமிடுகள் தோன்றியது போலவே இராக்கிலுள்ள யூபரிட்டீஸ்

3