பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அதற்குப் பிரஞ்சு ஆசிரியர்-'பூனைவரும் துவா ரம் வழியாக அதன் குட்டியும் வராதோ ?’ என்று மெதுவாகக் கூறினர்.

“ஆமாம்-ஆமாம்-அதை எண்ணுமல் தான் போய்விட்டேன்’ என்று மேதாவி கூறினர்.

பெரிய பூனைக்கும் சிறிய பூனைக்கும் ஒரு துவா ாம் போதும் என்று யோசியாத அந்தப் பெரிய மேதாவி யார்? இந்தச் சிறிய விஷயத்தை அறியாது. போனவர்க்கு எங்கும் பேரும் புகழும் உண்டான

H

காரணம் யாது ?

இவர் கான் உலகம் சிருஷ்டி செய்யப்பட்ட விதத்தைக் கூருவிட்டாலும் அது கிலைபெற்று கிற். கும் அரிய ரகசியத்தைக் கண்டு கூறிய பேரறிஞர் கியூட்டன் ஆவார். பெளதிக சாஸ்திரத்துக்கும் வானசாஸ்தியத்துக்கும் அஸ்திவாரமான இயற்கை விதிகளை அறிந்து கூறியதுதான் அவருடைய புகழுக்குக் காரணம். l

இவ்வளவு பெரிய விஷயங்களில் ஈடுபட்டிருக்க தால்தான் அவருடைய மனம் இரண்டு பூனைக்கும் ஒரு துவாரம் போதும் என்னும் உண்மையைக் கவனியாது போயிற்று போலும்.

ஒரு சமயம் அவரைப் பார்ப்பதற்காக அயல் நாட்டிலிருக்து ஒரு அறிஞர் வந்திருந்தார். கியூட் டன் அவரோடு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அவரை மத்தியானம் சாப்பிட வருமாறு அழைத்தார். அவரும் ஆகட்டும் என்று கூறி விடைபெற்றுக்கொண்டு சென்றார்.

48