பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


சமையச் சார்பாகச் சிந்தித்தவர்களிலே மிகவும் குறிப்பிடத் தக்க மாமேதையாக விளங்கியவர் பித்தாகரஸ்!

தத்துவஞானத்திலும், சமயப் பற்றிலும், அவருக்கு 'எத்தகைய சிறந்த நுண்ணிய சிந்தனைப் புலமை இருந்ததோ , அந்த அளவுக்கு அவர், கணித விற்பன்னராகவும், வானியல் அறிஞராகவும் திகழ்ந்து ஆராய்ச்சிகளை ஆற்றியுள்ளார்.

பித்தாகரஸ் வாழ்ந்த காலத்தில் எகிப்து நாட்டு மக்கள், கணிதத் துறையில் நன்கு சிறப்புற்றிருந்தார்கள்.

அவர்கள் கையாண்டு வந்த கருத்துக்களோடு (வேறு எந்தக் கருத்துக்களையும் ஒப்பிடுவதை விட, அதுவே, உலகம் முழுவதும் பரவி நன்கு தெரிந்தவைகளாகச் சிறப்புற்றிருந்தன.

எகிப்தியர்கள் சிறப்பு மிக்க கணித விளக்கங் களைப் பயன்படுத்தி வந்திருந்தாலும், அவை உண்மையானவை என்று உலகின் முன் மெய்ப்பித்திட, அன்று வரை எந்த ஒரு மேதையும் தோன்றவில்லை , எகிப்திலும் சரி-பிற நாடுகளிலும் சரி!

கிரேக்க நாட்டைச் சேர்ந்தவரும், சோமாஸ் என்ற ஊரில் கி.மு. 582 - ஆம் ஆண்டில் பிறந்தவருமான பித்தாகரஸ் என்பவர்தான், எகிப்து நாட்டு மக்கள் பயன்படுத்தி வந்த கணிதக் கருத்துக்கள் சரியானவை என்று, முதன் முதலில் உலகுக்கு தக்க சான்றுகளோடு நிரூபித்துக் காட்டியவராவார்.