பக்கம்:விடிவெள்ளி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 183 கிட்டது ஆற்றங்கரை ஓரமாகவே குதிரையை நடத்தி சென்ற இளம்வழுதி, அதைத் திருப்பி பழைய வழியாகவே மீண்டும் ஒட்டினான். ஒரு இடத்தில் சுற்றிச் சுற்றி வந்தான். பிறகு, ஆற்றைக் கடந்து அக்கரை சேர்த்தான். சாத்தனும் அவன் செயல்களையே செய்து தீர்த்தான் தரைமீது நாசி பதித்து மோப்பம் பிடித்து வருகிற தாய்க்கும், அதைத் தொடர்ந்து வருகிறவர்களுக்கும் குழப் பகும் மலைப்பும் ஏற்படுத்துவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்’ என்று விளக்கினான் இளம்வழுதி. இரவு வேகமாக வந்திறங்கியது. எங்கும் இருட்டைப் பூசியபடி அமைதி கனிந்து கிடந்த வெம்பரப்பிலே, குதிரைகளின் குளம்புகள் எழுப்பிய கனத்த ஓசை 'சடசட' என்று தொடர்ந்து ஒலி செய்தது நாயின் ஓயாத குரைப்பு கோரமாய்க் கேட்டது. இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் ஆற்றோரம் வந்துவிடுவார்கள். தாய் அங்குமிங்கும் ஒடி ஒடிக் குரைக் கும். எந்த இடத்தில் இறங்குவது, எப்படி இக்கரைக்கு வந்து தேடுவது என்று. தீர்மானிக்க முடிய்ாமல் அவர்கள் திணறித் தவிப்பார்கள். அதற்குள் நாம் வெகுதூரம் போய்விடலாம்’ என்று இளம்வழுதி உற்சாகமாகப் பேசினான். சாத்தன் கணபதியும் அவனும் இருளோடு கலந்து முன்னேறினார்கள். இருவருக்கும் நல்ல பசி சிறிதுதேரம் எங்காவது தங்கியிருந்து களைப்பாறிக்கொள்ளவேண்டும் என்ற உணர்வும் இருந்தது அவர்கள் பார்வையில் ஒரு புள்ளி மாதிரி சிறு ஒளி ஒன்று மினுமினுத்தது. எங்கோ உள்ள ஒரு வீட்டிலிருந்து தான் அது வருகிறது என்று வழுதி யூகித்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/164&oldid=905975" இலிருந்து மீள்விக்கப்பட்டது