பக்கம்:விடிவெள்ளி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கன்னன் ) 39 சட்டென்று அவன் கண்களைத் தாக்கின இரண்டு விழிகள் ... பார்வையா அது மின்னல் வீச்சுபோல் அல்லவா ஒளிர்ந்தது?... அந்த ஒளியை ஏவி, பின் மீட்டுக் கொன ட அவை கண்கள்தானா? புதிய வாள் போலும். கூரிய வேல் போலும் அல்லவா தோன்றுகின்றன!... கெண்டை விழிக்காரி அவளது முகத்தை அவன் நன்றாகப் பார்த்தான். அவனுக்கு அதன் பிறகு இதர பேண்கள் அங்கு இல்லாதவர்களே ஆயர்ை: இவள் அல்லவா பெண் இதல்லவா அழகு! இவள் பார்த்தது அன்றோ அமூதப் பார்வை' என்று இரங்கியது அவன் உள்ளம், அந்த அழகு மந்தை மெல்ல நகர்ந்தது, அவனைக் கடந்து, ஒருசிலர் அவனைத் திரும்பி தோககினர். அவன் பார்க்கிறாளா என்று பார்ப்பதற்காக அவன் பார்த்தான் , அதே நோக்கத்துடன்தான் அவளும் பார்த்திருக்க வேண் டும். அதனாலேயே இரண்டு பார்வைகளும் மோதிக் கொள்ள நேர்ந்தது. அதைச் சில பெண்கள் கண்டு கொண்டார்கள். ஒருத்த குதும்புத்தனமாய் ஏதோ முணுமுணுத்திருக்க வேண்டும். அங்கே சிரிப்பு கலகலத்தது. ப. ர்த்த பார்வை லின் முகம் கீழ்வானச் செம்மையைப் பிரதிபலித்தது... இனம்லழுதியும் புன்முறுவல் பூத்தவாறு தன் வழியே நடத்தான். அதன் பிறகு அவர்கள் பக்கம் திரும்பி நோக்கி னானில்லை. ஆயினும் அவன் மணக்கண்கள் அவளையே கண்டு வியத்தன. மின்னல்" என்றது மனம். இல்லை. இல்லை பூங்கொடிதான்' என்றது அது. மயில்' என்று திருத்தம் செய்தது. மான்' என்று திரித்துக் கூறியது. எல்லாம் தப்பு, அற்புத அழகி - இதுதான் சரி' என்றது. ரசனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/40&oldid=906093" இலிருந்து மீள்விக்கப்பட்டது