பக்கம்:விடிவெள்ளி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 விடிவெள்ளி தான் சூடாகப் பதில் சொல்லியது அவனுக்கு வேகமாக விழுத்த அறையினால் நிலைகுலைந்தான் யவனன். அலன் தலை சுற்றியது தள்ளாடிய அவனை அவன் தோழன் தாங்கிப் பிடித்துக் கொண்டான். கோபத்தால் கொதித்து நின்ற இளம் வழுதியின் கை அங்கு பலர் குழுமினார்கள். யவனன் மீது வெறுப் பும் பகைமை உணர்வுமே மிகுதியாக ஏற்பட்டிருப்பதைப் புரிந்த களப்பிரன் பேசாமல் அவனை அழைத்துக் கொண்டு நடந்தான். - . "நீங்கள் விரைவாக வீடு செல்லுங்களம்மா!' என்று பெண்களிடம் கூறிய இளம்வழுதி அவர்கள் முகத்தை நேருக்கு நேர் கண்டதும் வியப்புற்றான். அன்று காலை யில் எதிர்ப்பட்ட பெண்களில் இருவரே அவர்கள் என்றும். வைகை நீரில் மிதந்து சென்ற குடத்தின் சொந்தக்காரி யான அமுதவல்வி தான் அவர்களில் ஒருத்தி எனவும் அவன் அறிய முடிந்தது. அவ்விருவரும் அவனைத் தெரிந்து கொண்டார்கள். அமுதவல்லியின் முகத்திலே செம்மை படர்ந்தது; கண்கள் மகிழ்வால் மலர்ந்தன; தானத்தால் தாழ்ந்தன. நன்றிப் பெருக்குடன் அவனைப் பார்த்து விட்டு அவர்கள் வேக மாக நடக்கலானார்கள். نسميه" 盎 முதவல்லியையே கவனித்து நின்ற வழுதியின் தேசன் மீது கைவைத்தான் சாத்தன் கணபதி நீரும் தவறே செய்கிறீர்!’ என்று குறும்புச் சிரிப்புடன் கூறி னான்.

'உலகம் மிகக் குறுகியது போலும் காலையில் நான் கண்ட பெண்களை மீண்டும் காண நேர்ந்தது மட்டுமல்ல; மதுபடியும் அவர்களுக்கு உதவி செய்யவும் நேரிட்டதே! என்றான் இளம்வழுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/63&oldid=906144" இலிருந்து மீள்விக்கப்பட்டது