பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

206. அறுசுவை உணவுடன் இலையிலே சோறு.
        இலையை எறிந்துவிட்டு இலையிலே சாப்பிட

207. ஒரு மரம்; அதில் பன்னிரண்டு கிளை;
        ஒவ்வொரு கிளையிலும் முப்பது இலை;
        முப்பது இலையிலும் பாதி வெள்ளை;
        பாதி கறுப்பு.

208. உயிர் இல்லாத நீதிபதி
        ஒழுங்காக நியாயம் சொல்வார்.

209. மனிதன் போடாத பந்தலில்,
        மலர்ந்து கிடக்கும் பூக்கள்.

210. பொழுது விடிந்தால் நல்லது என்றது ஒன்று:
        விடிய வேண்டாம் என்றது மற்றொன்று;
        விடிந்தால் என்ன, விடியாவிட்டால் என்ன,
        என்றது இன்னொன்று.

211. அவன் இல்லையேல் அவனியில் ஒன்றுமில்லை.
        அவனை நிரப்பலாம்; பிடிக்க முடியாது.
        உணரலாம்; காண முடியாது.

212. பாதாளத்தில் பிறந்தவன்;
        பம்பரத்தில் சுழன்றவன்;
        வெய்யிலில் காய்ந்தவன் -
        எல்லோர் வீட்டிலும் இருப்பவன்.

213. ஒட்டை வாயனுக்கு
        விழுந்தபல் முளைக்கவில்லை.

214. ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டை.

215. உடல் உண்டு, தலை இல்லை.
        கை உண்டு, கால் இல்லை.
        அல்லும் பகலும் ஒடும்; அது என்ன?

216. கறுப்புச் சட்டை போட்டவன்;
        கபடம் அதிகம் உள்ளவன்;
        கூவி அழைத்தால் வந்திடுவான் - தன்
        கூட்டம் முழுதும் சேர்த்திடுவான்.