பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

231. அர்த்த ராத்திரியில்
        யாரும் இல்லா வேளையில்,
        மழையில்லா நேரத்தில்,
        மாப்பிள்ளை குடைப் பிடிக்கிறான்.

232. வெறும் நாளிலும் தோரணம் கட்டுவான்.

233. வளைந்த தங்கக் கம்பி வானிலே தெரியுது.
        நீட்ட முடியாது: நகை செய்ய முடியாது.

234. சென்னப்பட்டினம் சிவப்பு;
        சீரங்கப்பட்டினம் கறுப்பு:
        உடைத்துப் பார்த்தால் பருப்பு:
        உண்டு பார்த்தால் கசப்பு.

235. செம்பு நிறையச் சிகப்பு முத்து.

236. நெடுக வளர்ந்தவனுக்கு நிழல் இல்லை.

237. முன்னே போகிற பிள்ளைக்கு,
        முதுகிலே மூன்று பட்டை.

238. அட்டைக்கு ஆயிரம் கண்;
        முட்டைக்கு மூன்று கண்.

239. அதட்டுவான்; அலறுவான் - ஆனால்
        கோட்டையை விட்டு வரமாட்டான்.

240. வெள்ளைக் குளத்தில் கறுப்பு வாத்து.

241. அடுக்கடுக்காய்ப் பட்டுடுத்தி,
        அமர்ந்திருப்பாள் கடைத் தெருவில்.

242. கொம்பு கொம்படா, புளியங்கொம்படா,
        நின்று தாக்கடா, உயிரைப் போக்கடா.

243. எட்டடிப் பெட்டகத்தில்
        எவரும் போற்றும் கடிகாரம்.

244. பட்ட மரத்தில் பம்பரம் சுத்துது.

245. அந்தாப் போகுது; இந்தாப் போகுது.
        அடியைப் பார்த்தால் தெரியவில்லை.