பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

260. கொத்தரோ தச்சரோ கட்டாத கோபுரம்;
        சின்னதாயிருக்கும் சித்திரக் கோபுரம்.

261. எட்டுக்கால் ஊன்றி, இருகால் படமெடுத்து,
        வட்டக் குடை பிடித்து வருகிருர் துரை மகனார்.

262. ஒற்றைக் கண்ணன்; ஒற்றைக்காலன்,
        ஒடி ஒடி வேலி அடைக்கிறான்.

263. இலையுண்டு; கிளையில்லை.
        பூ உண்டு; மணமில்லை,
        காய் உண்டு; விதையில்லை.
        பட்டை உண்டு; கட்டை இல்லை.
        கன்று உண்டு; பசு இல்லை.

264. உள்ளுர் மணியக்காரருக்கு
        உள்ளங்கை ஒட்டை.

265. ஆற்று மணலை அள்ளித் தின்போம்;
                                நாங்கள் ஒரு சாதி,
        வெள்ளைக் கல்லை உடைத்துத் தின்போம்;
                                நாங்கள் ஒரு சாதி.
        ஒனானை உரித்துத் தின்போம்;
                                நாங்கள் ஒரு சாதி.

266. அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும்.

267. ஊசி போல் இலையிருக்கும்;
        ருத்ராட்சம் போல் காய்காய்க்கும்.

268. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது.

269. அடர்ந்த காட்டின் நடுவிலே ஒரு பாதை.

270. இதயம் போல் துடிப்பிருக்கும்.
        இரவு பகல் விழித்திருக்கும்.

271. நிலத்திலும் இருப்பான்; நீரிலும் இருப்பான்.
        வாலோடு பிறப்பான்; வாலை இழப்பான்.
        கை முளைக்கும்; கால் முளைக்கும்.
        கத்தலும் தத்தலும் அதிகரிக்கும்.