பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

324. குளத்து நிறைய இருக்கும் தண்ணிர்;
        குருவி குடிக்க முடியாத தண்ணிர்.

326. சிகப்பு மொச்சைக் கொட்டை,
        பகட்டுப் பட்டுச் சட்டை.

327. நாலு மூலைச் சதுரப் பெட்டி - அதன்
        மேலே ஒடுமாம் குதிரைக் குட்டி.

328. பச்சைப் பெட்டியில் பத்துச் சரம்;
        எடுத்துப் பார்க்கலாம் - ஆனால்
        தொடுத்துப் போட முடியாது.

329. கைக்குள் அடங்குவான்;
        காரிருள் அகற்றுவான்.

330. உதைத்தாலும் அடித்தாலும்,
        ஒன்றாக இருக்கும்.

331. செய்வதைச் செய்வான்;
        சொன்னதைச் செய்யான்.

332. கால் இல்லை; ஒட்டம் உண்டு,
        மூச்சு இல்லை; காற்று உண்டு.

333. ஆயிரம் குழந்தைகட்கு
        அரைஞாண் ஒன்று.

334. காகிதத்தைக் கண்டால் கண்ணிர் விடுவாள்;
        முக்காடு போட்டால் சொக்காயில் தொங்குவாள்.

335. தன் மேனி முழுதும் கண்ணுடையாள்;
        தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள்.

336. வாயிலிருந்து நூல் எடுப்பான்;
        மந்திரவாதியல்ல.
        கிளைக்குக் கிளை தாவுவான்;
        குரங்கும் அல்ல.
        வலை விரித்துப் பதுங்கியிருப்பான்,
        வேடனும் அல்ல.