பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4



44. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி.

45. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டி.

46. சிறுசிறு கதவுகள்; செய்யாக்கதவுகள்;
      திறக்க அடைக்க சத்தம் செய்யாக் கதவுகள்.

47. கத்திபோல் இலை இருக்கும்
      கவரிமான் பூப்பூக்கும்,
      தின்னப்பழம் பழுக்கும்,
      தின்னாத காய் காய்க்கும்.

48. காலில்லாத பந்தல் காணக் கான விநோதம்.

49. காலையில் நான்கு கால்;
      கடும்பகலில் இரண்டு கால்;
      மாலையில் மூன்று கால்;
      முடிவிலே எட்டுக்கால்.

50. கிணற்றைச் சுற்றி வெள்ளைக் கல்.

51. படுத்துத்துங்கினால் கண்முன் ஆடும்;
      அடுத்து விழித்தால் மறைந்தே ஒடும்.

52. ஒற்றைக்காலில் சுற்றிடுவான்;
      ஒய்ந்து போனால் படுத்திடுவான்.

53. கடிவாளம் போட்டால் காலிலே கிடக்கும்.

54. ஒரு பானைச் சோறு வடித்து,
      ஓராயிரம் பேருக்குப் போட்டு,
      இன்னும்கூட மிச்சமிருக்கு.

55. மடக்காமல் பறக்குதே,
      அது என்ன மந்திரி?
      சிமிட்டாமல் விழிக்குதே,
      அதுதான் அரசே.

56. ஒல்லியான மனிதன்; ஒரே காது மனிதன்,
      அவன் காது போனால், ஏது பயன்?

57. நீரிலே கொண்டாட்டம்; நிலத்திலே திண்டாட்டம்.

58. சின்னஞ் சிறு வீட்டில் சிப்பாய்கள் பலபேர்.

59. கோயிலைச் சுற்றிக் கறுப்பு;
      கோயிலுக்குள்ளே வெளுப்பு.