உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 மு. கருணாநிதி களை முறியடித்த வெற்றிச் செய்திகளையும் கவனித் திட வேண்டும். க அமெரிக்கா, கொலம்பஸ் தோண்டிய புதையல்! புதிய நாடு! அங்கே குடியேறியவர்கள் ஆங்கிலேயர் கள். அவர்களால் அமெரிக்காவும், அமெரிக்காவால் அவர்களும் வளம்பெறும் வாய்ப்பு மலர்ந்திட்டது. உடனே பிரிட்டன், அவர்களை தனக்கு வரிகட்ட வேண்டுமென்று உத்திரவிட்டது. அவர்கள் மறுத் தனர். வரிகட்ட வேண்டும் என்ற அதிகாரத் தொனியிலிருந்து விடுபெற முயற்சித்தனர். எதிர்த் தனர். வெற்றியும் பெற்றனர். இதுவும் விடுதலைக் கிளர்ச்சிதான்! குணகோளார்த்தம், குடகோளார்த்தம் என்று பிரிக்கப்படும் உலகத்திலே பெரும்பாலும் குண கோளார்த்தமான கிழக்குப் பகுதியை குடகோளார்த் தம் அடிமையாக்கி வைத்திருந்திருக்கிறது; வைத்து மிருக்கிறது. கிழக்குப்பகுதி, சென்றுபோன நாட் களிலும் சரி - இப்போது சில பகுதிகளும் சரி - அடிமையாக்கப்பட்டும், ஏகாதிபத்தியப் பிடியில் சிக்கி யும், காலானிகளாகவும், காமன்வெல்த் போதையில் வீழ்ந்த நிலையிலும் வாழ்ந்திடும் போக்கிலேயே இருந்து வந்திருக்கின்றன. இருந்து வருகின் றன.