உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

な 25 மு.கருணாநிதி திராவிடத்தை வடநாட்டிடமிருந்து, என்று எக்காள யிடுகிறோம். இந்த விடுதலைக் கிளர்ச்சிக்கு தரப்பட்டது விளக்கங்கள் மட்டுமல்ல ; வீரர் பலரின் வாழ்வையும் தந்திருக்கிறோம். க தாலமுத்து நடராசன் கல்லறை. கல்லறையிலே சிந்திய கண்ணீர். மரத்திலே ஊசலாடவிடப்பட்ட மாவீரன் உடை யார்பாளையம் வேலாயுதம். மதுரையிலே தூவிவிடப்பட்ட நெருப்பு. மஜீதின் பிணம். தேனீ திருவிளையாடல். குன்றத்தூர் துப்பாக்கிப் பிரயோகம். குடந்தை வீதியிலே குருதி வெள்ளம். கர்பத்தோடு காட்டுக்கு விரட்டப்பட்ட வீரப் பெண்மணி கொள்கை வீரர்மேல் ஏவிவிடப்பட்ட சென்னை குதிரைப் பட்டாளம் சிந்த வைத்த செந் நீர். மொட்டையடித்த குட்டைச் செயல்.