உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 மு.கருணாநிதி கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் சிற்பக் களிலே "திராவிட பாணியில் செதுக்கப்பட்டது " என்ற வார்த்தைகள் சிறுநோக்கினரைப் பார்த்து சிரித் திடுகின்றன, சென்னை கடற்கரை அரசினர் கல்லூரி வாயி லிலே நிற்கும் உ; வெ. சாமிநாத அய்யரின் சிலையிலே முழக்கமிடுகிறது; "திராவிட வித்யாபூஷணம் " வித்யாபூஷணம் " என்ற வாக்கியம். தாகூரின் தேசீய கீதத்திலே "திராவிட உட்கல வங்க" என்ற அடிகள் நினைப்பூட்டுகின்றன திரா விடத்தை! கண்டும் காணாதவராய், கேட்டும் கேளாதவராய் நடத்திடும் அரசியல் கூத்தினர் "ஏதப்பா திராவி டம் " எனக் கேட்டு குதி குதித்து முகம் கொப்பளித் துத் துள்ளுகின்றனர். விடு பரிதாபந்தான் படவேண்டியிருக்கிறது, தலைக் கிளர்ச்சியின் வழியிலே வீழ்த்திடும் இந்த வீட ணர்களை எண்ணி! "இந்திய யூனியனிலிருந்து பிரிந்தால் வாழ முடியுமா? சிறிய நாடாக ஆகிவிடாதா?" இப்படி ஒரு மணல் சுவர் அடுத்தபடியாக!