உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மு.கருணாநிதி படுவான். பிறகு அவன் திரும்பி வரமாட்டான். அவன் உயிர் போக்கப்படும்போது மக்கள் செய்யும் ஆரவாரக் கூச்சலைத்தான் சிறைச்சாலை எதி ரொலிக்கும். மனைவி தனியே விடப்படுவாள். பிறகு குழந்தைகள் தனியே விடப்படும். பின்னர் சிறைச் சாலையே காலியாகிவிடும். இப்படி பழி தீர்த்துக் கொண்டனர், வேதனைகளை அனுபவித்துக் கிடந்த வர்கள். குழந்தைக்கும், பெண்களுக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை ; அவர்கள் உடலில் ஓடுவது பிரபுத் துவ ரத்தம் என்று விளக்கம் தரப்பட்டு அவர்களின் தலைகள் துண்டாடப்பட்டன. இப்படி சரித்திரத்தின் இரத்தக்கரை படிந்த ஏடுகளைப் புரட்டிவிட்டு, 'இரத்த ஞாயிறு'களை மனக் கண்களினால் சந்தித்துவிட்டு யோசித்தால் நம்முடைய நாட்டு விடுதலையையும் இரத்த விருந்து வைத்துத்தான் அடையவேண்டுமோ என்ற கேள்வி எழலாம். ஒவ்வொரு நாடும், தன்னுடைய விடுதலைக்கு துப்பாக்கியையும் பீரங்கியைபும் நம்பியிருந்தன. பாஸ்டில் சிறையை உடைத்து விட்டால், பிரபுக் களின் வம்சத்தை பூண்டறுத்து விட்டால், காரியம் முடிந்து விடுமென்று நம்பிக் கொண்டிருந்தார்கள் மக்கள் தலைவர்கள். இப்போது நாகரீக உலகம்,