உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 56 ஆனால் அங்கெல்லாம் விடுதலைக் கிளர்ச்சி நடந்த விதம் வேறு. இங்கு நடந்திடும் விதமும், வளர்ந்திடும் விதமும் வேறு. அங்கு மக்களிடத்திலே மூண்டெழுந்த விடுதலை உணர்ச்சி தண்ணீரை விட்டு வெளியே எடுத்த ‘பாஸ்பரஸ் ' போன்றது. சிலரை விடுதலைக் கிளர்ச்சிக்கு தூண்டவேண்டு மானால் அது கற்பூரத்தைக் கொளுத்துவது போன்று சுலபமான தாயுமிருந்தது. ஆனால் இங்கே விடுதலையுணர்வை மூட்டிவிடு வது நனைந்துபோன விறகை எரிப்பது போல் அவ் வளவு கஷ்டமானது. வேதனை-விசாரம்-விம்மல்-விழியிலே நீர்- இவ்வளவுமிருக்கும். ஆனால் இதற்கெல்லாம் கார ணம் விடுதலையில்லாமையே என்பதை உணர மாட் டார்கள் - விதியின் தன்மை என்று உரைத்துவிடு வார்கள். இவர்களிடம் விடுதலை. வீரர்களுக்கு இரட் டிப்பு வேலை ஏற்படுகிறது. விடுதலைக் கனலை கிளப் புவது ஒன்று! விதி-மாயை-என்ற வேதாந்தத்தை போக்குவது ஒன்று! அந்த வேதாந்தமென்ன சாதாரணமாகளை அவர்கள் உள்ளத்தில் குடியேறியிருக்கிறது. ஆண்