உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 60 மேடை யென்பதை மறந்து கன்னத்தில் போட்டுக் கொண்ட பக்தர்கள் எத்தனை பேர் அன்று! அவர் களின் எண்ணிக்கையைக் குறைப்பதிலே விடுதலை இயக்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சாதாரண மானவையா? பலமும், வீரமும் பகவான் தருவதல்ல மனிதப் பண்புதான் என்பதை உணர்த்தி, முதலில் தன்னம் பிக்கையை வளர்த்து, அதன் பிறகு விடுதலைப் போருக்கு அழைத்திடும் இரட்டிப்பு வேலை இங்கும் தேவைப்பட்டது. ஆனால் அயராமல் அஞ்சாமல் ஆற்றிய பணியின் காரணமாய் வெற்றி விளக்குகள் தென்படுகின்றன விடுதலை வீரர் பாதையில். சேக்கிழாரைக் கண்டவர்களிடம் சேரன் செங்குட்டுவனை நிறுத்தி, சத்தியவான் சாவித்திரி களைக் கண்டவர்களிடம் சந்திரமோகன் சிவாஜிகளை நிறுத்தி புராண போதையை தெளிவித்து புதுமையை நடனமாடவிட்ட பெருமைக்குரியவர் களும், அந்தப் புதுமையை போராட்டத்தின் படைக் கலமாக்கிடும் சிற்பிகளும் திராவிட விடுதலை இயக் கத்தார்தான். ஓவியக் கலையிலும் புரட்சி-புதுமை-திராவிட விடுதலைக் கிளர்ச்சிக்கு அதுவும் தேவைப்பட்டது என்று கருதுகிற காரணத்தால்.