உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 மு.கருணாநிதி ' நமஸ்காரம்'-வணக்கமாக மாறிவிட்டது என்றால்-அது சாதாரணம்தான்-அதற்குத் தரப் பட்ட, விலை எவ்வளவு என்பதுதான் சிந்திக்க வேண்டியதொன்று. இரத்தப் புரட்சி சுலபமானது. எண்ணப் புரட்சி மிக மிக கஷ்டமானது. ஆனாலும் திராவிட விடுதலைப் பாசறையிலே கத்தி தீட்டப்படுவதில்லை. புத்திதான் தீட்டப்படுகிறது. எண்ணப் புரட்சிதான் நாகரீகமானது என்று அறிவுலகம் தெளிவாகத் தெரிவித்திடுகிறது. புரட்சி என்றால் ரத்தக் குளம் வெட்டுவதும், அமைதி யென்றால் ஆட்டுக்குட்டியாக மாறிடுவதுமல்ல பொருள். விடுதலைக் கிளர்ச்சி வேறு நாடுகளில் நடை பெறுகிறது. நடைபெற்றது. இங்கும்-திராவிடத்தில் நடைபெறுகிறது. பல பல போர் முனைகளில் விடுதலை வீரர்கள் குதித்திருக்கின்றனர். மொழி காக்க நடைபெற்ற போரிலே குடந் தைத் தெருவிலே ரத்தம் பெருக்கெடுத் தோடியது. அது விடுதலை வீரர்களின் தகுதியே தவிர மாற்ற எண்ணப் புரட்சி நடத்தியவர் ரின் குருதியல்ல.