உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அந்தத் தைரியம்


"தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியம் ராமஸ்வாமி நாயக்கருக்கு இருக்கிறது. அதிலே தவறில்லை. அயர்லாந்து நம் மாகாணத்தில் 16-ல் ஒருபங்கு இருக்கிறது. டிவேலரா சுயராஜ்யம் நடத்தவில்லையா ? தைரியமிருந்தால் நடத்தலாம்."

என்று, அன்பர் ஆச்சாரியார், 1945 மே 28ந் தேதி மாலை சென்னை கோகலே மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். ஆச்சாரியாரின் பேச்சிலே, உபநிஷத்துக்களுக்குள்ளது போன்ற உட்பொருள் உண்டு என்பது, அரசியலில் உள்ளவர் அனைவருக்கும் தெரியும். குல்லூகபட்டர் என்ற பட்டம் அவருக்குண்டு, அது கேவலம் கேலிக் குறிப்பல்ல!!

தமிழர்கள் மட்டுமே, என்ற தொடரிலே, மட்டுமே என்பது ஒரு கண்ணியாக அமைந்திருக்கக்கூடும்; தைரியம் என்ற வார்த்தையிலே, ஏதேனும் புதைபொருள் இருக்கக்கூடும்; தவறில்லை என்பதிலேகூட திணித்திருப்பினும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தொடர்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் பொருள் கிடக்கட்டும், அந்தவாசகத்தின் முழு நோக்கமே கூட, இனப்பண்புக்கு ஏற்ற ஓர் வெடி வீச்சாக இருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், ஆச்சாரியார், எந்தக் கருத்தைக்கொண்டு, எந்த நோக்கத்துக்காக இதைக்கூறி இருப்பினும், நாம், அவருடைய சிந்தனையை இழுத்து, அவர் சொல்லித் தீரவேண்டியதாகி விட்ட, தமிழர் ஆட்சி என்ற