திருமுகம்
41
சதுரமைல் ஆகிறது. இதனைக்கொண்டு, மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 'திராவிட நாடு' என்று நாம் எல்லைக் கோடிடும் இடம் இங்கிலாந்தைப் போல ஏறக்குறைய இருமடங்கு பரப்புள்ளது. 14 அல்பேனியாவுக்குச் சமம். 27 அல்ஸ்டர்களுக்குச் சமம். 4 ஆஸ்டிரியாக்களைக்கொண்ட பரப்பு. 10 பெல்ஜியம், 2 ஜெக்கோஸ்லவேகியா, 3 கிரீஸ், 4 அயர்லாந்து, 10 ஹாலந்து, 4 போர்ச்சுகல், 14 பலஸ்தீன் இவைகளுக்குச் சமம்.
திராவிட நாட்டின் குடிவளம் குறைவற்றது. சிலநாடுகள், இடம் விரிந்தும், அதற்கேற்றபடியின்றிக் குடிவளம் குறைந்தும் இருக்கும். இதற்கு நேர்மாறாக உள்ள நாடுகளும் உண்டு. இங்கு இத்தகைய இன்னல் இல்லை. சென்னை மாகாண ஜனத்தொகையின் எண்ணிக்கை சுமார் 4½கோடியாகும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். தன்னாட்சியுடன் வாழவும், தக்க பாதுகாப்புடன் இருக்கவும், எந்த எதிர்ப்பையும் சமாளிக்கவும், கூடுமான அளவு குடிவளம் இருக்கிறது. அதிலும், "திராவிடர்கள்" திறமை, தீரம், உழைப்பு, உள்ளப்பண்பு, முதலியவற்றிலே குறைவில்லாதவர்கள். முன்னாள் முதலே, அவர்கள் முதல்வர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். வீரத்தைப் போற்றுபவர்கள். சாவுக்கு அஞ்சிப் பணிந்தவர்களல்ல. வாழ்வுக்காக மானத்தை இழக்க மறுத்த மரபினர். எனவே, இக்குணம் படைத்தவர்கள், தன்னாட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உறுதியாகக் கூறலாம்.
திராவிட நாட்டின் இயற்கை வளம்போல், உலகிலே பல நாடுகளிலே காணமுடியாது. பனி