திருமுகம்
55
கிக் கொள்வது, விடுதலை அல்ல. இந்திய விடுதலை என்ற இனிப்புப் பூச்சின் சுவையைக் கண்டு, மனு, மார்வார் கம்பெனி தயாரிக்கும் மாத்திரையையும் உட்கொண்டு, வீணராய், வறிஞராய், திராவிடர் ஆகிவிடக் கூடாது.
ஆகவேதான், "'திராவிடநாடு திராவிடருக்கே' என்று முழக்கமிடுங்கள்; உரிமைக்காகப் போராடுங்கள்" என்று கூறுகிறோம். திராவிடநாடு, நம் நாடு; நல்ல வளமுள்ள நாடு; தன்னாட்சிக்கு ஏற்ற நாடு; அதனைப் பெற, அதிலே தன்னாட்சி தழைக்கப், பணிபுரிவதே, திராவிட வாலிபனின் இன்றையக் கடமை. இதற்கு முன்பு வேறு என்றும் இல்லாத அளவுக்கு இக்கடமை இன்று நம்மை அழைக்கிறது. இது விடுதலைப் போர்க்கோலம் ! வீணருக்கு உழைத்து வீழும் காலம் அல்ல !
இந்நாளில் வாழும் நீங்கள் திராவிட விடுதலைப் போர்ப் படையின் முன்னணி வீரர்கள். உங்களுடைய முன்னேற்றைத்தைப் பொறுத்தே படையின் வளர்ச்சியும், வெற்றியும் இருக்கிறது. எனவே வீரர்காள், முரசு கொட்டுக ! "வளமார் எமது திராவிடநாடு வாழ்க ! வாழ்கவே !!"