உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

விடுதலைப் போர்

உயரிய இடமளித்து, தக்கதோர் நிலையை உண்டாக்கவேண்டும் என்பதே, அரசியலின் குறிக்கோளன்றி, அனந்தாச்சாரியார்க்குக் கிடைக்கக்கூடிய சட்டசபை ஸ்தானத்தை, அடிவயிறு புண்படத் தேர்தல் பிரசாரம் செய்து, அடி உதைப்பட்டு, அறிவீனர்களின் ஏசலையும் பெற்றுக்கொண்டு, ஒரு ஆறுமுகப்பிள்ளைக்குக் கிடைக்கும்படி செய்வது அல்ல ! சேலம் இதனைத்தான் தெளிவாக்கி இருக்கிறது. இது தமிழகத்திலே தம்மையே தமிழரின் பணிக்காக அர்ப்பணம் செய்துவிட்ட, அழைப்பு கிடைத்ததும் தாலமுத்துக்களாகத் தயாராக இருக்கும், தன்னலமற்ற, தளராத பற்றுக்கொண்ட, தமிழ் இளைஞர்களின் இருதய கீதம்!

அனந்தாச்சாரியாரும் இராமபக்தர்; ஆறுமுகப் பிள்ளையும் அப்படித்தான். முன்னவரும் வர்ணாஸரமி, பின்னவரும் அவ்விதமே. ஆச்சாரியாரும் அவன் அருளையே வேண்டுவோர்; பிள்ளைக்கும் அதுவே நினைப்பு. இருவருக்கும், இந்தச் சமுதாய அமைப்பிலே அவ்வளவு அக்கரை கிடையாது, என்ற நிலை இருக்குமானால், அனந்தாச்சாரிக்குக் கிடைக்கும் இடம், ஆறுமுகம்பிள்ளைக்குக் கிடைக்கச் செய்வதால், யாதுபலன்? ஏன் அதற்காக ஒரு கூட்டம் வேதனையை அனுபவித்துக்கொண்டு, வீணருடன் மோதிக்கொண்டு, விதியற்றவர் கதியற்றவர் என்று மதியற்றவரால் தூற்றப்பட்டு, உழைக்க வேண்டும் என்று கேட்கிறோம். எத்தனை ஆயிரம் வாலிபர்களின் உள்ளம் ஒடிந்திருக்கிறது, இந்த நிலைமையைக் கண்டு! அவர்களை இந்தப் பித்த-