உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

விடுதலைப் போர்


கிறது. சிறுகிராமம் முதற்கொண்டு பெரியநகரம் வரையிலே செல்லுங்கள், செய்தியைச் சொல்லுங்கள், திராவிடர் கழகத்திலே, ஏராளமாகத் தோழர்களைச்சேர்த்துக்காட்டுங்கள். தலைவர்கள் ஆச்சரியப் படவேண்டும், அந்த அணிவகுப்பைக் கண்டு. ஆரியம் அலற, ஆங்கிலம் உணர ஒரு அணிவகுப் புத்தேவை! விரைவாகத் தேவை! வேலை மிகுதியாக இருக்கிறது. விடுதலைமுரசு கொட்டப்பட்டுவிட்டது. இன அரசுக்குப்போர், இறுதிப்போர் நடந்தாக வேண்டும். இன்றே கிளம்புக, திராவிடர் கழகங்களை நிறுவ, பலப்படுத்த!!

ஆந்திரமும் கேரளமும், இந்த வேகத்தைக் காணும்நாள் தூரத்தில் இல்லை. அதற்கான வழி வகையும் நிச்சயம் வகுக்கப்படும்.

இந்நிலையிலே, திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றியது பிடிக்கவில்லை என்றுகூறியும், கட்சியை நடாத்தும் உரிமை எமதே என்று உரைத்துக் கொண்டும், ஒரு சிலர், அறிக்கைகள் விடுவதுபற்றி யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை. கூந்தலுள்ளோர் வாரிமுடித்துக்கொள்ளட்டும்! நமக்கிருக்கும் கவலையெல்லாம், யாராலாவது, எந்த முறையினாலாவது, இன்று நமது இனமிருக்கும் நிலைமைமாறித் திராவிடநாடு திராவிடருக்கே ஆகவேண்டும் என்பதுதான். அதைச்செய்யவே நாம், வடுநிரம்பிய உடலும் வைரம்பாய்ந்த உள்ளமும், சிந்தனை ததும்பும் மனமும், செய்வகை அனுபவமும் தெரிந்த, சிறைக் கோட்டத்துக்கும் வீட்டுக்கும் வித்தியாசமிருப்பதாகவே கருதாத, ஓய்வுதெரியாத, ஒரு பெரி-