உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

விடுதலைப் போர்


மூடியோ, பாலைவனம் மிகுந்தோ, மலைமிகுந்தோ மண்மேடாகவோ இருக்கும் நாடுகள் உண்டு. ஒரு பொருள்கிடைத்து மற்றவை ஏதும் கிடைக்காத நாடுகளும் உண்டு. திராவிட நாடு, இயற்கை வளம் குறைவறப் பெற்றுள்ளது. விளைபொருள்களுக்கு ஏற்ற இடம், அதற்காதாரமான ஆறுகள் பாய்ந்தோடும் அழகான நாடு. மலைவளம், காட்டுவளம் உண்டு. கடலோரக் காட்சியும் காணலாம். புதைபொருள் உண்டு. நாகரிக வாழ்க்கைக்குத் தேவையான சகல சாதனங்களையும் நாம் பெறமுடியும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான, உண்டி, உடை, இரண்டுக்கும், வெளிநாட்டவரை எதிர்பார்க்க வேண்டிய அவசியமேயின்றி, திராவிடம் தன்னாட்சியின் மூலம், திட்டமிட்டு வாழலாம். விஞ்ஞானகாலத் தேவைகளான, தாதுப்பொருள், மின்சாரம், ஆகியவைகளை ஏராளமாகப் பெறவும் வழி இருக்கிறது. புரண்டோடும் ஆறுகளெல்லாம், " அருட்பெருஞ்ஜோதி " யாக மாற்றப்பட வழி உண்டு. இயற்கை திராவிட நாட்டைச் சீராட்டுகிறது.

திராவிட இனம், மொழி வழி, தமிழர், தெலுங்கர், கேரளர், கன்னடர் என்று வேறுபட்டவர் எனினும், இனமூலம், கலை, வாழ்க்கைமுறை, என்பவைகளிலே ஒன்றுபட்டவர்கள். இப்பிரிவினர்களுக்குள் உள்ள வேறுபாடுகள், முரண்பாடுகள் அல்ல. இவ் உண்மையை உணர்ந்தால், இனத்திலே ஓர் ஒருமைப்பாடு வந்து சேரும். இந்த வேறுபாடுகள் நீக்கக்கூடியன, நீக்காவிட்டாலும், கேடொன்றுமில்லை. இவை, இனத்தின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கக்-