உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரர் வேண்டும்

59


ஒரு கந்தல் அழகாக இருந்தால் ஆனந்தம் அதிகமாகும்! மாட்டுக் கழுத்திலே கட்டப்படும் மணி, அந்த மாதருக்கு அணியாகிவிடும்! அதுபோல மிகமிகச் சாமான்யமான சில்லறை அதிகாரங்களைப் பெறுவதும், சிரித்துப் பேசக் கற்றுக்கொள்வதும், சீமான்களின் தோழமையைப் பெறுவதும், சிலாக்கியான காரியம், அதுவே அரசியல்மூலம் அடையவேண்டிய பேறு என்று எண்ணுகின்றனர் சிலர். கரிக்குக் கிடைப்பது அரிமாவுக்குக்கிடைத்தால் அரிமா அகங்குளிருமா? அதுபோலத்தான், தன்னலத்துக்காக எதோ ஒரு தகரக்குவளை போன்ற அதிகாரம் கிடைத்தால்போதும் என்று திருப்தி அடையச் சிலர் தயாரில் இருக்கலாம். தமிழன், தமிழ்ப்பண்பை இழவாதவன், வீரன், உண்மைத்தொண்டன், விடுதலைவிரும்புவோன், இவை தமைத் துச்சமெனக் கூறிடுவான், தூ தூ என்று ஏசிவிடுவான், அவன் விரும்பமாட்டான், காகிதப்பூஞ்சோலையை, கலர்க் கண்ணாடியாலான நகையை, கனியாத பலாவை!

அரசியலின் மூலம், நாம் வேண்டுவது, சில்லறைப்பதவிகளை அல்ல, சிங்கார வாழ்வையல்ல. நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம் துணைக்கொள்கிறோம். அதன் பொருட்டே அரசியலிலே பணியாற்றுகிறோம். எந்தத் திராவிட இனம் இந்த மானிலம் முழுதாண்டிருந்தார், இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர், என்று நமது புரட்சிக்கவி பூரிப்போடு கூறினாரோ அந்த வேந்தர்கள் வீழ்ந்தபிறகு அரசு இழந்து ஆண்மை குறைந்து, அறிவு குழம்பிக்கிடக்கிறதோ