பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதுபாண்டியன்

21

நேர்த்தியான நேரமென நெடுவிலங்கு பூட்டினர்

கன்னித் தமிழ்ரத்தம் காய்ந்ததோ என்றே

எண்ணி கழுந்திருந்த இளையவனைக் கண்டவர்கள்

வெள்ளிக் காசுக்கு வெள்ளிப்பல் காட்டியவர்கள்

எள்ளி நகையாடி. ஏளனப்பண் பாடினர்

திருப்பத்தூர் நடுவே தீரன் சின்னவனை

விருப்பத்தூர் அனுப்ப விரைவுடன் தூக்குக்

கயிற்றில் தொங்கவிட்டுக் காற்றில் மிதக்கவிட்டார்

வயிற்றில் தீவளர்த்து வந்தனைச் சுதந்திரத்தின்

களங்காணத் துடித்த காளையினை நம்மவரே

களப்பலி யாக்கிக் களிப்படைந்தார்! அவனோ

“முள்ளால் கீறியவையும் சொல்லால் கூறியவையும்

எள்ளால் இறைத்தவையும் இருக்கட்டும்” என்றதைக்

கேட்டிருந்த தமிழ்நெஞ்சே வேங்கையைத் தூக்கில்

போட்டிருந்த தமிழ்மண்ணே போர்வாள் முனையிலே

மண்ணை மதித்துப்பின் விண்ணை மிதித்தவனை

எண்ணத்தில் வைத்திடுவாய் என்றிடுவேன் முடிப்பேன்!