பக்கம்:விடையவன் விடைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 9 |

முன்னிலைப்படுத்துவதும், பெறலரும் பரிசில் நல்குமதி' என்று பரிசிலைக் கூறுவதும் ஆற்றுப்படை இலக்கணத்தோடு பொருந்தியுள்ளன. உரையாசிரியர்கள் எழுதியவற்றையும் பார்த்தால் தெளிவாக விளங்கும்.

345. முத்தொள்ளாயிரம் என்ற பெயர் ஏன் வந்தது?

சேரசோழ பாண்டியர்களாகிய மூன்று முடிமன்னர்கள் மீதும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்கள் அமைந் தமையால் அப் பெயர் வந்தது. தொள்ளாயிரம் பாடல் களால் அமைந்த நூல்கள் வேறு சிலவும் தமிழில் இருந்தன. வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் என்ற நூல்களின் பெயர்களால் இதனை அறியலாம். -

346. திருமந்திரத்தை இயற்றிய திருமூலர் கடவுள் வாழ்த்துப் பாடலாக விநாயகர்மீது ஐந்து கரத்தனை' என்று பாடக் காரணம் உண்டா ? -

மரபு பற்றிப் பாடினர். அந்தப் பாடல் திருமூலர் பாடியது அன்று என்று சொல்வாரும் உண்டு. -

347. கோவைகளில் ராஜாக் கோவை, மந்திரிக் கோவை என்று இரண்டு இருக்கின்றனவாமே, அவற்றை இயற்றியவர்

யார் ?

மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவை யாரை ராஜாக் கோவை என்றும், சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருவெங்கைக் கோவையை மந்திரிக் கோவை என்றும் புலவர் கூறுவர். ---

348. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்’ என்று வரும் வெண்பாவில் முனிமொழி என்று குறிப்பிட்டுள்ளது எந்த நூல் : - - - . -