உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடையவன் விடைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 99.

378. கம்பரும் ஒட்டக்கூத்தரும் சமகாலத்தில் வாழ்ந்த வர்களா ? இருவரும் போட்டியிட்டார்கள் என்று கதை, வழங்குகிறதே ?

இருவரும் வேறு காலத்தினர். அவர்கள் போட்டியிட்ட தாக உள்ளது கற்பனைக் கதை, க ம் பர் ஒன்பதாம் நூற்ருண்டிலிருந்தவரென்பது சில ஆராய்ச்சியாளர் முடிவு. ஒட்டக்கூத்தர் இரண்டாம் கு .ே ல | த து ங் க சோழன் காலத்தில் இருந்தவர்.

379. டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் இலக்கண நூல் எதையாவது பதிப்பித்திருக்கிருர்களா ?

நன்னுரல்-மயிலைநாதர் உரை, நன்னூல்.சங்கர நமச்சிவா யர் உரை, புறப்பொருள் வெண்பா மாலை, தமிழ் நெறி விளக்கம் என்னும் இலக்கண நூல்களைப் பதிப்பித்திருக் கிரு.ர்கள். -

380. கஞ்சனூர் ஆழ்வார் என்பவர் யார் ? அவர் வரலாற்றை எங்கே காணலாம் ? -

கஞ்சனுர்ரில் வைணவ குலத்தில் தோன்றிச் சைவராக மாறிய அரதத்த சிவாசாரியாருக்குக் கஞ்சனூர் ஆழ்வார் என்று பெயர். கஞ்சனூர் ஆழ்வார் சரிதை என்ற நூல் 'ஒன்று டாக்டர் உ. வே. சா. நூல் நிலையத்தில் இருக்கிறது. இன்னும் அச்சாகவில்லை. - - *

381. டாக்டர் உ. வே. சா. அவர்களுக்குத் தாகூரினத்ய கலாநிதி என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள் ? . காஞ்சி காமகோடி பீடத்தில் எழுந்தருளியிருக்கும் ரீ சங்கராசாரிய சுவாமிகள் வழங்கிஞர்கள். - . . 382. ரீவைஷ்ணவர்களைக் குறிக்கும் போது உ. வே.

என்று முதலில் அழைத்துக் குறிக்கிருர்கள். உபய வேதாந்தாசாரியார் என்பதன் சுருக்கம் என்று அதை