உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடையவன் விடைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 101

387. கலைமகளைப்பற்றிய நூல்கள் தமிழில் எவை உள்ளன ? -

கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி, குமரகுருபர முனிவர் இயற்றிய சகல கலாவல்வி மாலை என்பவை பழைய நூல்கள். கலைமகள் துதியாகத் தனிப் பாடல்கள் பல உண்டு. .

388. கண்டன் அலங்காரம் என்பது எத்தகைய நூல் ? - @ణాs LTt இராசராச சோழனுக்குக் 56ir-r என்று பெயர். அவனைப் புகழ்ந்து வெண்பாவால் இயற்றிய நூல்

கண்டன் அலங்காரம் என்று தெரிகிறது. சில பாடல்கள் மட்டும் கிடைக்கின்றன. .

339. விவேக சிந்தாமணி என்பது சீவகசிந்தா மணியைப் போன்ற காப்பியமா? . .

- பல தனிப் பாடல்கள் கொண்ட தொகுதி விவேக

சிந்தாமணி.

- 390. ஐந்தாவது வேதம் என்று எதற்குப் பெயர் :

பாரதத்தை அவ்வாறு சொல்வர். 'நீடாழி உலகத்து

மறைநாலொ டைந்தென்று நிலை நிற்கவே, வாடாத

தவவாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்னநாள்" என்று

வில்லி பாரதத்தில் வருகிறது. - .

391. கப்பற் கோவை என்பது யாரைப் பாடியது ? அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் ?

கப்பலூர் என்ற ஊரில் இருந்த கருமாணிக்கன் என்ற வள்ளலைப்பாடிய ஐந்திணைக் கோவை அது. திருவான்மியூரில் உள்ள டாக்டர் ஐயரவர்கள் நூல் நிலையத்தில் கிடைக்கும்.