பக்கம்:விடையவன் விடைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம்

1. எதையும் எழுதத் தொடங்கும்போது வ. போடுகிருர் களே; ஏன் ?

அதற்குப் பிள்ளையார் சுழி என்று பெயர். எதையும் தொடங்கும்போது விநாயகரை நினைக்கும் வழக்கத்தைப் பின்பற்றி அவ்வாறு செய்கிரு.ர்கள். பிள்ளையார் சுழி என்பது ஒம் என்ற எழுத்து நாளடைவில் மாறி அமைந்தது.

2. பிள்ளையார், மூத்த பிள்ளையார்-இருவரும் ஒருவரா,

இருவரா ? - - -

பழங்காலத்தில் பிள்ளையார் என்று முருகனையும், மூத்த பிள்ளையார் என்று விநாயகரையும் வழங்கிஞர்கள். இப் போது விநாயகரையே பிள்ளையார் என்று வழங்குகிரு.ர்கள்.

3. விகாயகப் பெருமான் ?

விநாயகப் பெருமான் பிரம்மசாரி அல்லர். விநாயகர் பலவகைப்படுவார். வல்லவை விநாயகர், சித்தி புத்தி விநாயகர் என்று வழங்கும் மூர்த்திகள் முறையே வல்லவை என்ற மனைவியையும், சித்தி புத்தி என்ற தேவிமாரையும் உடையவர்களாக இருப்பார்கள். .

4. வக்ரதுண்டன் என்று விாயகப் பெருமானுக்குப் பெயர் வரக் காரணம் என்ன ?

விநாயகருடைய துதிக்கையை முக்கு என்பது மரபு.

யானைக்குத் துதிக்கையே மூக்காக இருக்கும். நெடுமூக்கிற் கரியுரித்தார்' என்பது தேவாரம். வக்ரதுண்டன்’ என்ப.

விடை-8