பக்கம்:விடையவன் விடைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 . விடையவன் விடைகள்

தாங்கினன், பிறகே சூரன் மயில் ஆக, அதை முருகன் வாகன மாகக் கொண்டான்.

13. முருகன் படத்தில் சேவல் இருக்கக் காரணம் என்ன ?

முருகனுக்குச் சேவல் கொடியாக இருப்பது.

14. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது ? அந்தப் பெயர் வருவதற்குக் காரணம் என்ன ?

செங்கல்வம் என்பது செங்கழுநீர். திருத்தணிகையில் ஒரு பொய்கையில் மூன்று செங்கழுநீர் மலர்ந்ததனல் அதற்குச் செங்கல்வ கிரி என்று பெயர். அங்கே எழுந்தருளி யிருக்கும் முருகனுக்குச் செங்கல்வராயன் என்று திருநாமம்.

15. முருகனைப்பற்றிய புராணங்கள் எவை எவை?

கந்த புராணம், சுந்த புராணச் சுருக்கம், முருகனுக்குரிய தலங்களைப்பற்றிய புராணங்கள், வள்ளியம்மை புராணம், தேவயான புராணம் என்பவை.

. 16. திருமுருகாற்றுப் படையை அல்லாமல் முருகன்

புகதைச் சொல்லும் ஆற்றுப்படை நூல் வேறு உண்டா ?

கச்சியப்ப முனிவர் இயற்றிய திருத்தணிகை ஆற்றுப் படை திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் முருகன் பெரு மையைப் பாடுவது. > ‘.

17. தமிழில் கந்த புராணத்தையன்றி முருகன் வரலாற்

றைச் சொல்லும் நூல்கள் உண்டா?

சம்பந்த சரணலயர் இயற்றிய கந்தபுராணச் சுருக்கம், வெண்பாப்புலி வேலுச்சாமிக் கவிராயர் இயற்றிய கந்த புராண வெண்பா என்ற இரண்டு நூல்கள் உண்டு. அமரர்