பக்கம்:விடையவன் விடைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 விடையவன் விடைகள்

45. திருவெம்பாவையில் வரும், ஒத உலவா ஒருதோழன் தொண்டருளன்’ என்பதற்குச் சரியாகப் பொருள் விளங்க வில்லை; விளக்க வேண்டும். -

ஒரு தோழம் தொண்டருளன் என்பதுதான் சரியான பாடம், தோழம் என்பது பெருங் கூட்டத்தைக் குறிப்பது. பெருங் கூட்டமான தொண்டர்களை உடையவன் என்பது பொருள். .

. 46. நம்பியாண்டார் நம்பி கண்டுபிடித்த தேவாரப் பதிகங்

களே அன்றிப் பிற்காலத்தில் ஏட்டுச் சுவடிகளில் எவையேனும் புதிய பதிகங்கள் கிடைத்திருக்கின்றவா ? -

திருவாரூருக்கு அருகில் திருவிடைவாய் என்ற சிவத் தலம் ஒன்று இருக்கிறது. அங்கே உள்ள கல்வெட்டு ஒன்றில் ஒரு முழுத் தேவாரப் பதிகம் கிடைத்திருக்கிறது. ஞானசம் பந்தர் பாடியது அது. அது நம்பியாண்டார் நம்பி வகுத்து அமைத்த திருமுறைகளில் இல்லை. இப்போது அதைச் சில புத்தகங்களில் அச்சிட்டிருக்கிருர்கள். -

47. பழைய நூல்களில் காஞ்சி ஏகாம்பா காதரைப் பற்றியும் காமாட்சியம்மையைப் பற்றியும் எ ைவயேனும் செய்திகள் வருகின்றனவா? -

மாமூலனர் என்பது ஒரு புலவர் பெயர். அப்பெயர் ஏகாம்பரநாதரைக் குறிப்பதாகச் சிலர் கொள்வர், மாமரத் தின் அடியில் இருப்பவர் என்பது பொருள், மாவடி என்ற பெயரை இன்றும் சிலர் வைத்துக்கொள்கிருர்கள் அப்படியே காமக் கணி என்பது காமக்கண்ணி என்பதிலிருந்து வந்ததென்றும், காமாட்சி என்பதையே அவ்வாறு வழங்கினர் என்றும் கொள்ள இடம் உண்டு. இந்த இரண்டு பெயாகளும் சங்ககாலப் புலவர்களின் பெயர்களாக வந்துள்ளன.