120 விடையவன் விடைகள்
ராமாயணத்தில் வரும் துதி. பஞ்ச பூதங்களேயே அஞ்சு என்று குறிக்கிருர் புலவர். ஐந்து பூதங்களில் ஒன்ருகிய வ்ாயு வில்ை பெறப்பட்ட அநுமன், ஐந்தில் ஒன்முகிய ஆகாயமே வழியாக, மேலானவளுகிய இராமனுக்காகச் சென்று, ஐந்தில் ஒன்ருகிய பிருதுவி அல்லது பூமி பெற்றமகளாகிய சீதையைக் கண்டு, பகைவர் ஊரில் ஐந்தில் ஒன்ருகிய தீயை வைத்தான். அவன் நமக்கு அருள் செய்து பாதுகாப்பான்’ என்பது பொருள். பஞ்ச பூதங்களையும் பாட்டில் இணைத்துச் சொன் னது ஒர் அழகு.
62. இராமாயணத்தில் வரும் பரசுராமரும் மகாபாரதத்தில் வரும் கர்ணனுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த பரசுராமரும் ஒருவரா ? அப்படியானல் ராமாயணமும் மகாபாரதமும் ஒரே சமயம் நடந்த நிகழ்ச்சிகளாகுமே -
இருவரும் ஒருவரே. சிரஞ்சீவிகளில் ஒருவர் பரசுராமர். ஆதவின் அவர் இரண்டு காலங்களிலும் இருந்தவர்.
63. கம்பராமாயணத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் கம்பர் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில் புரியும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரைப்பற்றிக் கூறிய பின், அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் என்று ஒருமையில் கூறுகிறர். இதற்கு விளக்கம் என்ன ? . . . . . . . . . . . . . . .
உலகம் யாவையும் தாமுள வாக்கலும், நிலைபெறுத் தலும் நீக்கலும் நீங்கலா, அலகி லாவிளையாட்டுடை யாரவர், தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே’ என்பது பாட்டு. கடவுள் ஒருவர்; அவரே மூன்று தொழிலுக்கும் மூலகாரனர் - என்ற கருத்தைச் சொல்வது இந்தப் பாட்டு. உடையார் எவரோ அவர் தலைவர்; அவருக்கு நாங்கள் சரணம் என்று பொருள் கொள்ள வேண்டும்,எல்லாம் ஒருவரையே குறிப்பன்.