122 விடையவன் விடைகள்
நெற்றிக்கு மேலே தலையில் சூடாமணியை மங்கைமார் அணி கின்றனர். பழங்காலத்தில் இங்கேயும் அணிந்திருந்தனர் என்பதற்கு இலக்கிய ஆதாரம் உண்டு.
69. ஆட்டுக்கிடாய் வாகனம் உடையவர்கள் யார் யார் ?
முருகன், செவ்வாய், அக்கினி என்னும் மூவரும் ஆட்டை வாகனமாக உடையவர்கள்.
70. கடவுளுக்கு நிவேதனம் செய்யும் வழக்கத்தைத் தேவாரம் சொல்லவில்லை என்கிருர்களே; அது உண்மையா ?
பூசனை ஈச ஞர்க்குப் போற்றவிக் காட்டி னேமே" என்பதில் அவி காட்டினேம் என்பது நிவேதனத்தைக் குறிக் கிறது. பழைய கல்வெட்டுக்களில் நிவேதனத்துக்குரிய பொருள்களின் அளவுகள் சொல்லப்பெற்றிருக்கின்றன.
71. பழைய காலத்தில் ஐயப்பன் வழிபாடு தமிழ் நாட்டில் இருந்ததா ?
இருந்தது. ஐயப்பனைச் சாத்தன் என்று வழங்கினர். காஞ்சீபுரத்தில் காமாட்சியம்மன் கோயிலில் சாஸ்தா சந்நிதி இருக்கிறது. காமக்கோட் டங்காவல், மெச்சி இனிதிருக்கும் மெய்ச்சாத்தன்' என்று ஒரு பழம் பாட்டு அவரைக் குறிக் கிறது. - . . . .
72. சைவர்களுக்கும் அத்வைதிகளுக்கும் வித்தியாசம் உண்டா சைவம், அத்வைதம் இவற்றின் அடிப்படைகள் யாவை ? . . . . .
சிவபெருமான வழிபடுகிறவர்கள் யாவரும் சைவரே; ஆதலின் அத்வைதிகளிலும் சைவர் உண்டு; அப்பைய. தீட்சி தர் அத்தகையவர். சைவம் என்பது வழிபாட்டினல் அமைந்த சொல். அத்வைதம் என்பது தத்துவக் கோட் பாட்டினல்