பக்கம்:விடையவன் விடைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i24 விடையவன் விடைகள்

வேதத்தின் அங்கங்களான வியாகரணம், சோதிடம், நிருக்தம், சந்தஸ், சிrை, கல்பம் என்ற ஆறும் ஆறு சாத் திரங்கள். வியாகரணம் என்பது சொல் இலக்கணம். சோதிடம் என்பது கோள்களின் நிலையைக் கூறுவது. நிருக் தம் என்பது வேதத்தில் வரும் சொற்களின் பொருளைச் சொல்வது. சந்தஸ் என்பது யாப்பிலக்கணம். எழுத்திலக் கணத்தைக் கூறுவது சிrை. வேத மந்திரங்களில் இன்னது இன்ன கருமத்தில் பயன்படுவதென்று கூறுவது கல்பம். -

77. அருவினைகள் ஐந்தும் அறும் என்ற ஒளவை பாடலில் வரும் வினைகள் ஐந்து எவை ?

பஞ்ச மாபாதகங்கள்.

78. வேதங்களை மூன்று என்றும், நான்கு என்றும், பல என்றும் மூன்று விதமாகச் சொல்கிருர்களே; மூன்றும் எப்படிப் பொருந்தும் ? .

பெருவழக்காக இருப்பது நான்மறை என்பது. ரிக்வேதம், யஜுர் வேதம், சாமவேதம், அதர்வவேதம் என்பவை அவை, அதர்வவேதம் என்பது ஏனைய மூன்று வேதங்களிலிருந்தும் தொகுத்த மந்திரங்களின் தொகுதி. ஆதலால் அதைத் தனியாகக் கருதாமல் வேதம் மூன்று என்று கொண்டார்கள். அதனுல் வேதத்துக்குத் த்ரயீ என்ற பெயர் வந்தது, சாகைகள் பலவாக் வேதம் விரிந்திருப்பதால் பல வேதம் என்ற வழக்கு வ்ந்தது. அனந்தாவை வேதா என் பார்கள்.

79. எம்பிரான் சதகத்தில், கண்ணுமறு சமயங்கள் பேர்வே றல்லால் நாதன்ரீ ஒருவனே என்றுள்ளது. மேற்கூறிய அறு சமயங்கள் எவை

சிவனைப் பரம்பொருளாக வழிபடும் சைவம், சக்தியைப்

பரதேவதையாகக் கொள்ளும் சாக்தம், கணபதியை முதற் கடவுளாகக் கொண்ட காணபத்தியம், முருகனைப் பெருந்