பக்கம்:விடையவன் விடைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 விடையவன் விடைகள்

வந்த இப்பலாஸ் என்பவன் வளி தொழில் ஆளும் திறத்தைக் கண்டு பயன் கொண்டானமே, உண்மையா ?

கரிகாற் சோழனை வெண்ணிக் குயத்தியார் பாடும் பாட் டில், நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக’ (புறம், 66) என்கிருர், நீர்செறித்த பெரிய கடலின்கண்ண்ே, மரக்கலத்தை ஒட்டிப் போர் செய்தற்குக் காற்றின்றி நாவாய் ஓடாதா.க. ஆண்டு வளிச் செல்வனே. அழைத்து ஏவல் கொண்ட வலியோன் மரபின் உள்ளானே' என்று பழைய உரைகார் எழுதுகிருர். இதனுல்கரிகாலனுக்கு முன் இருந்த சோழன் ஒருவன் தன் விருப்பம் போல் காற்றை இயங்கும்படி செய்தான் என்ற செய்தி புலளுகிறது.

11. அறுபத்து நான்கு கலைகள் யாவை ?

1. ஆடல், 2. பாடல், 3. இசைக் கருவி வாசித்தல், 4. விளுடமரு வாத்தியம், 5. ஒவியம், 6. கவிதை, 7. நிகண்டு, 8. யாப்பு, 9. அலங்கார சாஸ்திரம், 10. நாடகம் ஆடுதல், 11. கொடுத்த சமஸ்யையைப் பூர்த்தி செய்து பாடுதல், 12, ஒரு செய்யுளின் ஈற்றை முதலாக உடைய செய்யுளைச் சொல்லுதல், 13. விசித்திரமான செய்யுட்களைச் சொல்லுதல், 14. நெருடான பாடல்களைப் பாடுதல், 15. மறை பொரு ளாகச் செய்யுள் செய்தல், 16 ஏமாற்றுவதற்கான செய்யுள், 17. பல நாட்டு மொழிகள் கற்றல், 18. கீழ் மக்களின் மொழிக்ளேத் தெரிந்து கொள்ளுதல், 19 நூல்களை இனிமை யாகப் படித்தல், 20. முன் படிக்காத நூலாயினும் ஒருவர். படிக்கும்போது உடன் படித்தல், 21 ஒருவர் கூறும் குறிப்புகளைக் கொண்டு அவர் மனத்திலுள்ள செய்யுளைக் கூறுதல், 22. மனப்பாடம், 23. மனையடி சாஸ்திரம், 24 தச்சு வேலே, 25. தட்பவெப்ப நிலைக்கு ஏற்பத் தரையை மாற்றி யமைத்தல், 25 தோட்டக்கலே, 27. அரிசி, பூ முதலியவற்ருல் கோலம் போடுதல், 28 தின்பண்டங்கள் செய்தல் 29. பாண வகைகளைச் செய்தல், 30. தையல், நெசவு, 31 பிரம்பு வேலை, 32. பூ வேலை, 33. மாலை கட்டுதல், 34 தலைக் கொண்டை