பக்கம்:விடையவன் விடைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 63

கேர்ல் என்பது அரசனுடைய செங்கோலைக் குறிப்பது. அது ஆட்சியைக் குறித்து நின்றது. இங்கே. நம்முடைய நாட்டின் அரசாட்சியை நாமே பெற்று வாழ வேண்டும்’ என்ற கருத்துடையது அந்த வாக்கியம்,

253. கந்தர்சஷ்டி கவசத்தில், ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு, ஒதியே செபித்து உகந்துநீறணியில் என்ற வரிகளில் குறிக்கப்பட்ட பொருள் தினமும் முப்பத்தாறு முறை ஒத வேண்டும் என்பதா ? . 3- -

முப்பத்தாறு உரு என்பது முப்பத்தாறு முறை செபிப் பதை உணர்த்துவதுதான். . .

254. குணங்கள் அஞ்சாற் பொலியும் நலச்சேட்டைக் குலக்கொடி’ என மாணிக்கவாசகர் காக்கையின் குணங்களைக் கூறியுள்ளார். ஐவகைக் குணங்களைத் தெளிவுபடுத்த வேண்டு கிறேன். # * , * , .

'காலை எழுந்திருத்தல் காணும லேவுணர்தல் மாலைக் குளித்து மனபுகுதல் - சாலவே உற்ருரோ டுண்ணல் உறவாடல் இவ்வைந்தும் கற்ருயோ காக்கைக் குணம்’ என்ற பாட்டில் அந்த ஐந்து குணங்களும் உள்ளன.

255. எருவிட்டு இறைஞ்சி' என்று மீளுட்சியம்மை பிள்ளைத் தமிழில் வருகிறது. இது எந்த வழக்கத்தை விளக்கு வது ? - . : s

பிறையை வணங்கும் கன்னிப் பெண்கள் உலர்ந்த சாணத்தை அதன் முன் உதிர்ப்பது ஒரு வழக்கமென்று தெரிய வருகிறது. சந்திரன் பயிர்களை வளர்ப்பவளுதலால் பயிருக்கு உதவும் எரு விட்டு இறைஞ்சினர்கள் போலும்

256. கரிப்பாய் நானும் இருப்பேளுே என்பதில் வரும் நரிப்பு என்பதற்குச் சிறுமை என்று பொருள் சொல்கிருர்கள். அது பொருந்துமா ? .