பக்கம்:விடையவன் விடைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 . - விடையவன் விடைகள்

சொல்லுகிரு.ர்கள். நீண்ட நேரம் விடாமல் பெய்வதையே பாட்டம் என்பார்கள்.

ஆட்டம் பாட்டம் என்பதில் உள்ள பாட்டம் என்பது பாடலைக் குறிக்கிறது; ஆடல் பாடல் என்பதைப் போல ஆட்டம் பாட்டம் என்று வந்தது.

292. அவன் என்ன கொம்பனே? என்றும், அவனுக்கு என்ன, கொம்பு முளைச்சிருக்கோ? என்றும் கூறுவதன் கருத்து என்ன? . } -

ரிச்யசிருங்க முனிவர் அல்லது கலைக்கோட்டு முனி வருக்குத் தலையில் கொம்பு முளைத்திருந்தது. அவர் பெருந் தவத்தினர். அவர் சென்ற இடமெல்லாம் மழை பெய்யும். தசரதன் அவரை அழைத்து வந்து யாகம் செய்வித்துப் புதல் வர்களைப் பெற்றன். மற்றவர்களால் செய்வதற்கரியதைச் செய்பவன் என்ற பொருளில், கொம்பு முளைத்தவளுே?” என்று கூறுகிரு.ர்கள். .

293. நம்பியான் வார்த்தது தீர்த்தம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பொருள் என்ன ?

இது ஒரு பழமொழி. நம்பியான் என்பது அர்ச்சகருக்குப் பெயர். அவர் எந்தத் தண்ணீரைத் தந்தாலும் அதைப் புனிதமான தீர்த்தமாகக் கொள்வார்கள். பெரியவர்கள் என்ன செய்தாலும் அதை உயர்ந்ததாக உலகம் கருதும் என்ற கருத்தை உடையது இந்தப் பழமொழி.

294 இல் மறைவு, காய் மறைவு என்பதை விளக்க வேண்டுகிறேன். . . . . . . . . . . . - "இலைமறை காய்போல என்பது பழமொழி. இலைக் கூட்டங்களுக்கு நடுவில் காயும் பச்சை நிறம் பெற்று மறைந் திருக்கும். அதைச் சற்று ஆராய்ந்து கண்டுபிடிக்க