பக்கம்:விடையவன் விடைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 79

கூறிஞல் பாட்டுப் பிழையானது என்று தோன்றும். பிழை யாக எழுதியவனுடைய ஏடு ஒன்றுக்கும் பயன்படாது. இதையே இந்தப் பழமொழி சொல்கிறது. படித்தவனல் வரும் பேதம் பாட பேதம் எனவும் எழுதியவனல் வருவது பிரதிபேதம் எனவும் வழங்கும், - :

302. எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்று இருப்பவனைக் குறிக்க, கங்கணம் கட்டிக் கொண்டான்' என்கிருர்கள். கங்கணம் என்பதன் பொருள் என்ன? அது பழந்தமிழர் அணிகலன? -

கையில் அணியும் காப்புக்குக் கங்கணம் என்று பெயர். அது வடசொல். காப்புக் கட்டிக்கொள்வது, ஒரு செயலை' முடிக்கிறவரைக்கும் வேறு செ ய் ய மா ட் .ே ட ன் என்று விரதம் இருப்பதற்கு அடையாளம். இதை எப்படியும் நிறை வேற்றுவேன் என்று தீர்மானம் பண்ணுவதையே அப்படிச் சொல்கிரு.ர்கள். .

303. யானையுண்ட விள்ாங்கனி-இந்தத் தொடரின் பொருளை விளக்குக. . . . -

விளாம்பழத்துக்கு ஆனை நோய் என்ற நோய் வரும். அப்போது விளாம்பழத்தில் உள்ள யாவும் இன்றி வெறும் ஒடு மாத்திரம் இருக்கும். யானே நோயைக் குறிக்கும்போது யானைக்குரிய அடைமொழிகளையும் சேர்த்துச் சொல்வது புலவர் மரபு. நெடுங்கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்’ என்பது சிந்தாமணிப் பாட்டு. . . . .

304. சித்திரையப்பன் தெருவிலே என்பதற்கு விளக்கம் தரவேண்டும். " . . . . . . .

சித்திரா நட்சத்திரத்தில் பிறந்தவருடைய தந்தை வறுமையால் வாடுவார் என்ற பொருளுடையது அந்தப்

பழமொழி. அது எந்த அளவுக்கு உண்மை என்பது வேறு