பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 99 மூடப்பட்டுக் கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கிறாள். அவள் மார்பின் மீது பித்தளைச் சிலுவை வைக்கப் பட்டிருக்கிறது. தீஸ்ப் கத்தேரினாவின் முகத்தை நன்றாகப் புரட்டிப் புரட்டிப் பார்க்கிறாள். முகம் வெளுத் திருக்கிறது.) திஸ்ப் : (வேலைக்காரனைப் பார்த்து) இப்படி விளக்கை எடுத்துவா. (மீண்டும் கத்தேரினாவைப் புரட்டிப் பார்க்கிறாள். கண்ணை, உதடுகளைச் சோதிக்கிறாள் -கட்டிலின் திரைச்சீலைகளை இழுத்து விட்டுக் கட்டிலை மூடுகிறாள்.) (இராக்காவற் காரரைப் பார்த்து) நீங்கள் கல்லறைக்குச் சென்று வந்த்தை யாரும் பார்க்க வில்லையே. நிச்சயமாகச் சொல்லுகிறீர்களா? காவற்.ஒருவன்: ஒரே இருட்டு.சத்தடங்கி விட்டது.நாங்கள் போகும் போதும் வரும்போதும் ஒருவர்கூட எதிர்ப் படவில்லை. நீங்கள்தான் பார்த்தீர்களே. குழியிலே பிணப் பெட்டியை வைத்துக் குழியை மூடி விட்டோம், மேலே கருங்கற் பலகையை வைத்து அடைத்துப் பூசி விட்டோம். யாரும் ஐயப்படமுடியாது. கல்லைத் தோண்டிப் பார்த்தால்கூட பெட்டி இருக்கும். ஆனால் பெட்டியினுள் பிணம் இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் மக்களுக்கெல்லாம் இன்று இறந் தவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதென்பதில் சிறிதும் ஐயம் உண்டாகாது. நீங்கள் ஏன் வீணாகக் கவலைப்படுகிறீர்கள். வேலையைச் செவ்வனே முடித்து விட்டோம். - - * திஸ்ப் சரி நல்லது செய்தீர்கள். (வேலைக்காரனைப் பார்த்து) எங்கே ஆண் உடைகள் உடனடியாகத் தேவை என்றேனே. எங்கே அவைகள்?. வேலைக்காரன்: (இருட்டில் இருந்த ஒரு சிறு மூட்டையைக் காட்டி) இதோ இருக்கிறதம்மா,