பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i i 4 விட்டு சித்தன் விரித்த தமிழ் பல்லா யிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம்உன் மேலன்றிப் போகாது! எம்பிரான்! இேங்கே வாராய்! (2.8:5) (தீமைகள்-தீம்புகள்; போகாது.ஏறாது.1 என்ற பாசுரத்தில் மிக்க ஈடுபாட்டுடன் அதுசந்திக்கின்றார். திருவாய் மொழி 1.5:5 என்ற பாசுர உரையில் நம்பிள்ளை, சதீம்பு சேருவது கிருஷ்ணனுக்கே யாகையாலே, போம் பழியெல்லாம் அமணன் தலையோடே என்னுமாப் போலே அவன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுதல்’ என்று குறிப் பிடுவர். கம்பின்னை சூக்தியில் அடங்கிய வரலாறு: கள்ளன் ஒருவன் அந்தணன் ஒருவன் வீட்டில் கன்னமிட்டான். அந்தச் சுவர் அன்றைக்குத்தான் வைக்கப்பெற்ற ஈரச் கவராகையால், சுவர் விழுந்து அதனால் அமுக்கப் பெற்றுக் கள்ளன் இறந்தான். இந்நிலையில் கள்ளனின் உதவினர் வந்து அந்தணனைப் பழிதரவேண்டும் என்று திர்ப்பந்தித்தனர். பின்னர் இருதரத்தாரும் அரசன் பக்கல் சென்றனர். அந்த அரசனோ அறிவற்றவன்; மூர்க்கன். அவன் அந்தணனை நோக்கி, அந்தனா, நீ ஈரச்சுவர் வைத்ததனாலன்றோ அவன் முடிந்தான்? ஆகையால் நீ பழிகொடுக்க வேண்டும்' என்றான். அந்தணன், அரசே இஃது எனக்குத் தெரியாது; சுவர் வைத்த பணியாளனைக் கேட்க வேண்டும்' என்று பதிலிறுத்தான். பின்னர்ப் பணியாளரை வரவழைத்து, 'நீ தானே ஈரச்சுவர் வைத்தாய்; நீ தான் பழி தரவேண்டும்' என்று சொல்ல, அவனும் தண்ணீர் விடுகின்றவன் அதிகமாக விட்டிட் டான்; நான் இதற்குப் பொறுப்பல்லன்' எனத் தப்பித்துக் கொண்டான். பின்னர்த் தண்ணிர் விட்டவணை வர வழைத்து விசாரித்தபோது அவன், குயவன் பெரும்