பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சாவதார அதுபவம் $181 3. திருமாலிருஞ் சோலைமலை: மதுரையிலிருந்து வடக்கே 12 கல் தொலைவிலிருக்கும் அழகர் கோயில் என வழங்கும் திருத்தலமே இந்தத் திவ்விய தேசமாகும். திருக் கோயிலுக்கு முன்னதாக ஒரு சோலை சூழ்ந்துள்ளது. இந்தச் சோலைக்கு வடக்கிலும் மேற்கிலும் நீண்டுயர்ந்த மலைச் சிகரங்கள் இருப்பதையும் சோலையும் மரங்கள் அடர்ந்து இருண்டு இருப்பதையும் காணமுடிகின்றது. இந்தச் சோலையின் நடுவில்தான் திருக்கோயில் உள்ளது. இந்தத் திவ்விய தேசத்தைப் பெரியாழ்வார் மூன்று திருமொழிகளால் மங்களாசாசனம் செய்துள்ளார். (4.2; 4.3; 53;) திவ்விய தேசத்துக்கு வந்ததும் புறச் சூழ்நிலை: குலமலை கோலமலை குளிர்மா மலை கொற்றமலை நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலை யதே (4.3:5) (குலம்-தொண்டக்குலம்; கோலம்.அழகு; மா-பெரிய, கொற்றம்.வெற்றி; நிலம்-மரம் முளைக்கப் பாங்கான நிலம்; - என்ற பெரியாழ்வார் பாசுரத்தை நினைக்கச் செய்கின்றது. இனி, திருமொழிகளில் ஆழங்கால் படுவோம். இந்த மலையில் சிலம்பாறு பாய்கின்றது. கோயிலுக்கு வடபுற மாகவுள்ள வழியில் இரண்டு கல் தொலைவில் உள்ளது இந்த ஆறு; நூபுர கங்கை' என்பது இதன் வடமொழிப் பெயர் நூபுரம் -சிலம்பு. இதன் உற்பத்தி நம் கண்ணுக்குப் புலனாவதில்லை. யானைத் துதிக்கைபோல் அமைந் திருக்கும் கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்துக்கு வருவதுதான் நம் கண்ணில் படுகின்றது. இந்தத் தீர்த்தத்தில் அயச் சத்தும் தாமிரச் சத்தும் இருப்பதாகவும் .ே 1948.மே, 1965.செப்டம்பர், 1969-ஜூன் - சேவித்தது. --